“நான் கணவருடன் தான் வாழ்வேன்”அடுத்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை வீட்டாரை வெளுத்து வாங்கி.. க்ளைமாக்ஸில் காத்திருந்த ட்விஸ்ட்..!!

Spread the love

தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் எல்லாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபரும், சலாபத்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 6-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி காவல் நிலையத்தில் அவர்கள் தஞ்சமடைந்தபோது, “நான் என் கணவருடன் தான் வாழ்வேன்” என்று பெண் உறுதியாகக் கூறியதால் போலீசார் அவர்களைக் கணவர் குடும்பத்துடன் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், புதன்கிழமை அன்று மூன்று கார்களில் ஆயுதங்களுடன் வந்த பெண்ணின் குடும்பத்தினர், திடீரென மணமகனின் வீட்டிற்குள் புகுந்தனர். மணமகளின் கணவர், அவரது தாய் ஷியாமலா மற்றும் உறவினர்களைக் கொடூரமாகத் தாக்கி கீழே தள்ளிய கும்பல், அந்தப் புதுமணப் பெண்ணைக் கண் இமைக்கும் நேரத்தில் பலவந்தமாகக் காரில் ஏற்றி கடத்திச் சென்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட கணவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பாபன்னபேட்டை போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்தப்பட்ட பெண்ணை மீட்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வரும் போலீசார், இருதரப்பினரையும் மெதக் வட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.

Swetha

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

3 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

4 மணத்தியாலங்கள் ago