மும்பையிலுள்ள புகழ்பெற்ற ‘கேஎம்’ அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செஜல் பவார், அந்த மருத்துவமனையின் சூழல் மற்றும் வசதிகள் குறித்துக் கடுமையான சொற்களால் விமர்சிக்கும் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே, சடலங்களைக் கீறிப் பார்ப்பது குறித்து அவர் பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த புதிய வீடியோ தற்போதைய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், கேஎம் மருத்துவமனையை “அசிங்கமானது, நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் தரம் குறைந்த ஒரு இடம்” என்று மருத்துவர் செஜல் பவார் வர்ணித்துள்ளார். அங்கு பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் எந்நேரமும் எரிச்சலுடனும், மோசமான மனநிலையிலும் இருப்பதாகவும், நோயாளிகளிடம் கூட அவர்கள் கனிவாக நடந்துகொள்வதில்லை என்றும் அவர் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொதுமக்களும் நெட்டிசன்களும் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த செலவில் மருத்துவச் சேவை வழங்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அரசு மருத்துவமனையை, அங்கு பணிபுரியும் ஒரு மருத்துவரே இப்படித் தரம் தாழ்த்திப் பேசியிருப்பது முற்றிலும் பொறுப்பற்றத்தனம் என்று பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த ஜூன் 17-ம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி…
மெட்ரோ இரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர், 'How to Kill Men' (ஆண்களை எப்படிக் கொலை செய்வது) என்ற…
இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தைகள் கூட மொபைல் போன்களை இயக்குவதில் வல்லுனர்களாக மாறிவிட்டனர். அவ்வாறு விளையாட்டாக ஒரு சிறுவன் செய்த…
ரயில் தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்களுக்கு அருகில் கவனக்குறைவாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்த்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…
வெளிநாட்டில் வேலைக்குச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய மாலுமி ராகேஷ் சவுகானின் மரணம், சர்வதேச அளவில் இந்தியத் தொழிலாளர்களின்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, தமிழக முதல்வர் விஜய் நேரடியாகவே குதிரை பேரத்தில் (எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும்…