“நைட் நேரத்துல எதுக்கு போன், வச்சிட்டு தூங்கு”… மகளைக் கண்டித்த தந்தை… அண்ணனுக்கு போன் செய்துவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…!

Spread the love

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள குருநல்லி பாளையம் பகுதியை சேர்ந்த காளியப்பன் (55) என்ற கூலி தொழிலாளியின் மனைவி இந்திராணி. இந்த தம்பதிகளுக்கு நந்தினி (17) என்ற மகள் உள்ள நிலையில் அவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே நந்தினி நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த தந்தை காளியப்பன், செல்போனை வைத்துவிட்டு தூங்கு என்று அவரை கண்டித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த நந்தினி தன்னுடைய சித்தப்பா மகன் குணசேகரன் என்பவரிடம் தன்னை தந்தை திட்டி விட்டதாக செல்போனில் தொடர்பு கொண்டு கூறிவிட்டு விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

9 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

20 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

37 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

42 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

52 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

56 minutes ago