#image_title
இன்று இந்திய சினிமாவே இவரைத் தான் பிதாமகனாகக் கொண்டாடுகிறது. அப்படி என்ன சினிமாவுல சாதித்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு தாதாசாகேப் பால்கே வரலாறு சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் என்ர்ஜி டானிக்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் 1870-ல் பிறந்த பால்கே ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி என பல விஷயம் கற்று சகலகலாவல்லவராகத் திகழ்ந்தார். பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவிடம் லித்தோகிராப் வரையும் பணியில் ஈடுபட்டார். அதன்பின் மும்பை சர்.ஜே.ஜே. கலைப்பள்ளியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு ஓவியம் வரையும் முறையையும் படிப்படியாகக் கற்றுத் தேர்ந்தவர் வயிற்றுப் பிழைப்பிற்காக மேஜிக் செய்து தனது வாழ்க்கையை நகர்த்தினார்.
#image_title
இந்நிலையில் இவரது வீட்டருகே ஒருமுறை இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு சினிமாப் படமாகக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்து பிரமிப்பானவருக்கு தனக்குள் கலைத்தாகம் ஊற்றெடுக்க சகல வித்தைகளையும் கற்ற பால்கே அன்றுதான் இந்திய சினிமாவின் தந்தையாக உருவெடுக்க காரணமாக அமைந்தது. திரைப்படங்களை எடுக்க எடுத்த முயற்சிகள் தோல்வி ஆனது. நடிப்பு என்பது பாவம் என்றிருந்த காலகட்டத்தில் நடிகர்களைப் பிடிக்கவே மிகுந்த சிரமப்பட்டார்.
கடைசி பென்ச் to காக்கிச் சட்டை சிங்கம்.. தன்னம்பிக்கை நாயகன் சைலேந்திரபாபு ஐபிஎஸ்-ன் பவர் ஸ்டோரி…
முக்கியமாக பெண் கலைஞர்களுக்காக இவர் பட்ட பாடு சொல்லி மாளாது. எனவே ஆண் நடிகர்களுக்கு பெண் வேடம் கட்டினார். அவருக்கு நடிப்புப் பயிற்சியை வழங்கினார். பெண் வேடமிட்ட ஆண்களுக்கு பெண்களின் நளினம் வருவதற்காகவே கூந்தல் வளர்ப்பது, சமையலில் ஈடுபடுவது என பயிற்சி கொடுத்தார். இவ்வாறு சின்ன சின்ன படங்கள் எடுத்து பழகிய பின், இவர் இங்கிலாந்துக்கு கப்பலேறி வால்டன் ஸ்டுடியோவில் சினிமா கற்றுக் கொண்டு திரும்பினார்.
#image_title
இவர் இயக்கிய முதல் படத்தின் பெயர் அரிச்சந்திரா. நடிகர்களை எப்படித் தேர்வு செய்வது என்று அவர் யோசிக்கவே இல்லை. தனது குடும்பத்திலிருந்த மொத்தம் 18 பேர்களையும் நடிகர்களாக ஆக்கி நடிக்க வைத்து விட்டார் பால்கே. எனவே அந்த வகையில் முதல் இந்தியத் திரைப்படம் ஒரு குடும்பப் படமே ஆகும்.
இவர் பாடல் இல்லாம கோவில் திருவிழாவே இல்லை.. ‘தோட்டுக் கடை ஓரத்திலே’ புகழ் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்
தனது ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனி மூலம் பால்கே 75 படங்களை தயாரித்தார். ஆனால் பெரும்பாலானவை மௌனப் படங்களாக அமைந்தன. பின்னர் பேசும் படங்கள் வந்ததும் இவரால் தாக்குபிடிக்க முடியவில்லை; நொடிந்து போனார். இவரது மனைவி இவருக்கு உற்ற துணையாக இருந்தார். அவரே பல தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டு வேலை பார்த்தார். பசி வறுமை எல்லாம் வாட்டி எடுத்தன; வீட்டு சாமான்களை அடமானம் வைத்து ஜீவனம் நடத்தினார். வறுமையில் நாசிக்கில் கவனிப்பு இன்றி மறைந்து போனார். இவ்வாறு திரைப்படத்திற்காக அவர் செய்த பணிகளைப் போற்றும் விதமாக அவரை இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்கிறோம்.
இன்று இந்திய சினிமாவில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இவருடைய நினைவாக வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்ற தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் சிவாஜி, கே.பாலச்சந்தர், ரஜினிகாந்த் மட்டுமே.
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தின் முதன்மை அரசு வழக்கறிஞராக, ஆடு திருடிய வழக்கில் கைதாகி சிறை சென்ற வழக்கறிஞர் ஷேக்…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…