மதுரை, விருதுநகர் மாவட்டம் கோட்டையூர் பகுதியை சேர்ந்தவர் பாண்டி செல்வம் (25) , மனைவி வனிதா (24). கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமாகி 2 வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது. தனியார் நிறுவனம் ஒன்றில் பாண்டி செல்வம் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். குழந்தை பார்கவியும் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு பாண்டி செல்வம் வேலைக்கு போகும் வழியில் குழந்தை பார்வதியை பார்க்கச் சென்றுள்ளார்.
பின்பு வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது கணவன் மனைவி இருவரும் போனிலே சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இதைக் கண்டு குழந்தை பார்கவி கதறி அழுதுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிச்செல்வன் குழந்தையை அடித்து மனிதாபிமானமே இல்லாமல் தண்ணி தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது குழந்தை இறந்த நிலையில் கிடந்ததால் குழந்தையை எடுத்து சாக்கில் போட்டு கட்டி இயந்திரத்தின் அடியே வைத்துவிட்டு ஒன்னும் தெரியாதது போல் காவல் நிலையத்திற்கு சென்று குழந்தையை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
நிறுவனத்தில் இயந்திரத்தை இயக்க முயன்ற போது துர்நாற்றம் வீசி உள்ளது. அதனால் அங்கு இருந்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையில் குழந்தை உடல் இருப்பதை கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். இதைக் குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் பாண்டிச்செல்வனிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அதிர்ச்சி தகவலை அளித்துள்ளார் பாண்டி. அவரது குடும்பத் தகராறில் குழந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார். போலீசார் பாண்டி செல்வத்தை கைது செய்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியிலும், அவருடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…