நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை ஒன்றியம் சோழர் நாடு ஊராட்சி பகுதியில் விவசாயி செல்வராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் காசி துரைசாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை செய்யப்பட்ட செல்வராஜ் (55) பள்ளிக்குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர். விவசாயியான இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ள நிலையில் இவர்கள் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் செல்வராஜ் வீட்டுக்கு அடிக்கடி உறவுக்காரர் காசி துரைராஜ் வந்துள்ளார்.
அப்போது அவருக்கும் விஜயகுமாரின் மனைவி சந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. இதனை அறிந்த விஜயகுமார் மன வருத்தப்பட்டு தந்தை செல்வராஜிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்த செல்வராஜ், காசி துரைசாமியை கண்டித்துள்ளார். தனது மருமகளுடன் உறவை நிறுத்தி விட வேண்டும் என்று பலமுறை கூறியும் காசி துரைசாமி அதை காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு செல்வரராஜ் பள்ளி குழிப்பட்டி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது மது அருந்திவிட்டு அந்தப் பக்கம் வந்த துரைசாமியை அழைத்து மருமகளுடன் வைத்துள்ள உறவை கைவிட வேண்டும் என்று திரும்பவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அடிதடியாக மாறிய நிலையில் செல்வராஜை பாத்திரத்தில் அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்து காசி துரைசாமி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் காசி துரைசாமியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…
கார் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் பல நேரங்களில் க்ளைம் நிராகரிக்கப்படுவதற்கு முக்கியக் காரணம் பாலிசிதாரர்களின் கவனக்குறைவே ஆகும். பாலிசி காலாவதியாகி இருப்பது,…