விஜய் தொலைக்காட்சியில் ‘பொன்னி’ என்ற புத்தம் புதிய சீரியல் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘மகாநதி’ மற்றும் ‘சிறகடிக்க ஆசை’ என 2 சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து வெளியான ‘பொன்னி’ அப்பா மற்றும் மகள் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த தொடர் அம்மாவை இழந்த பொன்னி என்ற பெண், அவரது அப்பாவின் கடனுக்காக திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படுகிறது. இந்த திருமணம் அவரது அப்பாவின் கடனுக்கு எந்த வகையில் உதவுகிறது, அந்த திருமண வாழ்க்கை அவருக்கு எப்படி இருக்கப்போகிறது என்ற கதைக்களத்துடன் வெளியானது. ஆனால் தற்பொழுது பொன்னி தனது சிறுவயது நண்பனான சக்தி என்ற பெரிய குடும்பத்து பையனை திருமணம் செய்து கொண்டு அந்த வீட்டில் அவருக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் மாமியாராக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ஷமிதா. இவர் இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘பாண்டவர் பூமி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதைத்தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் பரவலாக நடிக்கவில்லை என்றாலும் பல கன்னட படங்களில் நடித்து வந்தார் சமிதா. பல வருடங்களுக்கு பிறகு சின்னத்திரையில் ‘சிவசக்தி’ என்ற சீரியலின் மூலம் கால் பதித்தார்.
இவர் அந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த ஸ்ரீகுமாரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார் சமிதா. தற்பொழுது விஜய் டிவியில் உட்பட பல டிவிகளில் சீரியல்களில் நடித்து வருகிறார்.குறிப்பாக இவரது நடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த மௌன ராகம் சீசன் 1 ல் பெரிதும் பாராட்டப்பட்டது.தற்பொழுது இவர் பொன்னி சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை ஷமிதா இந்த சீரியலை விட்டு விலக போவதாகவும், அவருக்குப்பதிலாக இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிகை சிந்து நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் பரிசு தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு…
புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தன் எதிரொளியாக சிகரெட் விலை அதிகரிக்கும் என்று…
தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…