Categories: சினிமா

‘நடிகையின் கதை’.. நடிகர் சத்யராஜை தொடர்பு படுத்தி பிரபல இதழில் வந்த பரபரப்பு செய்தி.. கலங்கிப் போன மொத்த குடும்பம்..

Spread the love

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரது வரிசையில் நடிகர் சத்யராஜ் சீனியர் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். வில்லனாக படத்தில் அறிமுகமாகி நாளடைவில் ஹீரோவாக ஆனவர். இப்போதும் தந்தை, பிரின்ஸிபஸ், போலீஸ் அதிகாரி என குணசித்திர வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பிறமொழி படங்களிலும் சத்யராஜ் நடிக்கிறார் குறிப்பாக வெப் சீரிஸ்களிலும் சத்யராஜூக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு காரணம் பாகுபலி படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்து சகல தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தவராகி விட்டார்.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. பிரபல வார இதழ் ஒன்றில் ஒரு நடிகையின் கதை என்ற தொடர் வெளியானது. அதாவது ஒரு நடிகை, தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவருக்கு நடந்த பாலியல் சீண்டல்கள், நடிகர்கள் ;நடந்துக்கொண்ட விதம் போன்ற விஷயங்களை பாதி உண்மை, பாதி கற்பனை என்ற அடிப்படையில் இந்த தொடர் இருந்தது. அதாவது பல நடிகைகள் சார்ந்த விஷயங்களும் இதில் ஒரு நடிகையே சொல்லும் விஷயம் போல இடம்பெற்றது. இது தமிழ் சினிமாத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ஒருமுறை நடிகர் சத்யராஜை குறிப்பிடுவது போல், இந்த தொடரில் அவர் சார்ந்த சாயலில் சில விஷயங்களும் எழுதப்பட்டது. இந்த தொடரில் நேரடியாக அந்த நடிகர் பெயரோ, புகைப்படமோ இடம்பெறாது. ஆனால், அவராக தான் இருக்கும் என தோன்றும் வகையில், அந்த தொடரில் பூடகமாக சில விஷயங்களை எழுதி, மறைமுகமாக சொல்லி விடுவர். நடிகையுடன் தொடர்பு என்ற வகையில் சத்யராஜை பற்றி தவறாக எழுதியதால், சத்யராஜ் குடும்பத்தினர் மனம் கலங்கி போயினர்.

அவரது மகள் திவ்யா, மகன் சிபிராஜ் படித்துக்கொண்டிருந்த நிலையில், இதை பற்றி அவர்களது நண்பர்கள், தோழிகள் விசாரிக்க, வீட்டுக்குள் அவமானமும், பீலிங்கும் என அவர்கள் நாட்களை கடத்தி இருக்கின்றனர். ஆனால், இதைப்பற்றி சத்யராஜ் கூறுகையில், நடிக்கறது என் வேலை, எழுதறது அவங்க வேலை. பத்திரிகை விக்கணுமுன்னு என் பேரை வெச்சு என்னமோ எழுதறாங்க என்று, ஜாலியாக சிரித்திருக்கிறார் சத்யராஜ்.

admin

Recent Posts

உடலை வாங்க மறுத்து போராட்டம்… ஆறுதல் தேடும் குடும்பம்… இறுதியாக இறங்கி வந்த அரசு… நேரில் சென்று அமைச்சர் கொடுத்த உத்தரவு…!!

கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…

13 minutes ago

ரூ.400 கோடி வசூல் வேட்டை…. மாட்டிய அன்பில் மகேஷ்… மேஜையில் இருந்த 1-வது ஃபைலை தூக்கிய முதலமைச்சர் விஜய்…. அமைச்சர் நிர்மல்குமார் போட்ட குண்டு…..!

தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…

35 minutes ago

ரூ.15 லட்சம் கொடுத்தா தான் சீட்டா?…. தவெக-வில் லீக்கான பகீர் ஆடியோ… குளித்தலையில் நடந்த பரபரப்பு சம்பவம்….!

தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.…

38 minutes ago

அன்பில் மகேஸைத் தொடர்ந்து கே.என்.நேரு?… லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி வேட்டை…. திமுகவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…

44 minutes ago

தனுஷுக்கு பின்னால் பாஜக?… டெல்லி ரகசிய சந்திப்பும் ‘காமாட்சி விளக்கு’ சர்ச்சையும்…. கிழித்து தொங்கவிட்ட மூத்த பத்திரிகையாளர்….!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த தகவல்களும், அவருடைய தற்போதைய நகர்வுகளும் தமிழக அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.…

47 minutes ago

அதிர்ச்சி… ஜெர்மனியில் புயல் காற்றால் கன்டெய்னர் கப்பல் மீது மோதிய… பிரம்மாண்ட சொகுசுப் படகு… உடைந்த மீட்புப் படகுகள்… நடுங்கவைக்கும் ஷாக்கிங் சம்பவம்…!

பிரேமர்ஹேவன் துறைமுகத்தில் கடுமையான புயல் காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாக, 'மைன் ஷிஃப் 3' என்ற பிரம்மாண்ட சொகுசுப்…

1 மணத்தியாலம் ago