தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் கலாபவன் மணி. கேரளா சினிமாவில் பிரபல நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் நடித்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் . இவர் கதாநாயகன், நகைச்சுவை நடிகர், அப்பா ,அண்ணன், வில்லன் என பல வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றது போல் தன்னை பொருத்திக் கொள்ளும் ஆகச் சிறந்த கலைஞன். இவர் பல குணச்சித்திர வேடங்களில் நடித்து தனக்கான ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார். தமிழில் வாஞ்சிநாதன், ஜெமினி , ஜே ஜே, புதிய கீதை, காதல் கிசுகிசு, வேல் ,எந்திரன் பாபநாசம் போன்ற பல படங்களில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் மட்டுமல்ல பாடகரும் கூட இவர் மிக அருமையாக நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் மிக சிறந்தவர் .இவர் ‘வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்’ படத்திற்காக 2002 ஆம் ஆண்டு கேரளா அரசின் திரைப்பட விருதை பெற்றுள்ளார். தமிழில் மறுமலர்ச்சி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
நடிகர் கலாபவன் மணி நிம்மி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இப்படி மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக பிரபலமாக இருந்த நடிகர் கலாபவன் மணி கடந்த 2016ம் வருடம் மது அருந்தும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் பற்றி சர்ச்சை எழுந்ததால், அவரது மரணம் கொலையா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கலாபவன் மணி மரணத்திற்கான உண்மை காரணம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
அவரது வழக்கை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி அளித்திருக்கும் பேட்டியில் ‘கலாபவன் மணி எல்லைமீறி தினமும் 12 முதல் 13 பீர் பாட்டில்கள் குடித்து வந்திருக்கிறார். கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி வந்த போதும் அவர் பீர் குடிப்பதை நிறுத்தவில்லை. அவர் இறந்த மார்ச் 6, 2016 அன்றும் 12 பீர் குடித்து இருக்கிறார். அவரது மரணத்தை அவரே தான் தேடிக்கொண்டார்’ என கூறியுள்ளார். தற்பொழுது இந்த செய்தி சினிமா வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…