விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நி7கழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே வரவேற்பு பெற்ற போட்டியாளராக இருந்து வந்தவர் பிரதீப் ஆண்டனி.இந்நிலையில், அவர் பெண்களிடம் தகாத முறையில் பேசுகிறார், கதவை பூட்டாமல் பாத்ரூம் உபயோகம் செய்கிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இதுதொடர்பான புகார் கமல் ஹாசன் வரை சென்ற நிலையில், அவர் ரெட் கார்ட் மூலமாக போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். தமிழ் பிக் பாஸ் வரலாற்றில் ரெட் கார்ட் கொடுத்து எந்த ஒரு போட்டியாளரும் வெளியேற்றப்படாத நிலையில், தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டார். இது அவரின் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது. இந்நிலையில், பிரபலங்களும், ரசிகர்களும், விஜய் டிவி முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை இணையத்தில் பதிவு செய்தனர்.
அதுமட்டுமின்றி அவருக்கு ஆதரவாக பல்வேறு வீடியோக்களும், பதிவுகளும் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பிரதீப்பும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்பொழுது பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பொய்யான குற்றச்சாட்டுகளால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதீப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கி விஜய் டிவி செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டுள்ளது.
அதாவது ஹாட் ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்க பிரதீப்பிடம் விஜய் டிவி கதை கேட்டுள்ளதாகவும், விரைவில் தற்போது பிரதீப் அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ‘தனக்கு இயக்குனர் ஆக வேண்டும்’ என்று கனவு இருப்பதாக பிரதீப் கூறியிருந்தார். ஒருவழியாக அவரின் கனவு தற்பொழுது நிறைவேற உள்ளது. இதனால் அவருடைய வாழ்க்கையிலும் அவருக்கு நாள் நிலை ஏற்பட உள்ளது . இதனால் அவரது ரசிகர்கள் தற்பொழுது மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…