ரூ.15 லட்சம் கொடுத்தா தான் சீட்டா?…. தவெக-வில் லீக்கான பகீர் ஆடியோ… குளித்தலையில் நடந்த பரபரப்பு சம்பவம்….!

Spread the love

தமிழக வெற்றிப் கழகத்தின் கரூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் குளித்தலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட இணைச் செயலாளராக இருந்த சதாசிவம் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு பொன் வினோத் நியமிக்கப்பட்டதுடன், அவைத் தலைவராக இருந்த சக்திவேல் துணைச் செயலாளராக மாற்றப்பட்டார். இந்த நிர்வாக மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட சதாசிவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த உள்கட்சி மோதலின் தொடர்ச்சியாக, கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசுவது போன்ற 1.03 நிமிடம் கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் போது வாருங்கள். 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக யார் பெரிய தொகையாகக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்குத் தான் சீட். டெண்டர் முறையில் யாருக்கு என்ன பதவி, எவ்வளவு தொகை என்பதை எழுதி பெட்டியில் போட்டு தலைமைச் செயலாளர் ஆனந்த் அண்ணனிடம் கொடுத்து விடலாம்” என்று அவர் பேசுவது போலப் பதிவாகியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத கட்சி நிர்வாகிகள் தரப்பில், “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை அதிக பணம் கொடுப்பவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் கூறுகிறார். மேலும், தொழில் நிறுவனங்களிடம் சட்டவிரோதமாகப் பணம் வசூலிக்கப்படுவது குறித்து கேள்வி கேட்கும் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு மிரட்டப்படுகிறார்கள். இதுகுறித்து தலைமை உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை தவெக கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், சரியாகச் செயல்படாத நிர்வாகிகளே மாற்றப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பதவி ஆசையில் உள்ள சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தகைய ஆடியோக்களைப் பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பணம் பெறுவது தொடர்பாகத் தான் எதுவும் பேசவில்லை என்றும், பணம் வாங்கினால் தானே தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

28 minutes ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

36 minutes ago

நயன்தாரா vs ஷகிலா… “அவங்க பண்ணா கிளாஸ்… நாங்க பண்ணா தப்பா?”… லாஜிக் கேள்விகளால் மிரள வைத்த ஷகிலா… வெடித்த புதிய சர்ச்சை…!!

1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…

45 minutes ago

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

56 minutes ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

1 மணத்தியாலம் ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

1 மணத்தியாலம் ago