அடியே, என் கூட ஒண்ணா இருந்ததை மறந்துட்டியா?… இங்க பாரு நீ என்கூட உல்லாசமா இருந்த வீடியோ… கள்ளக்காதலியை மிரட்டிய வாலிபர்… இறுதியில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளணூர் பகுதியை சேர்ந்த வெண்ணிலா (48) என்பவர் அதே பகுதியில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது சேலம் மாவட்டத்தை சேர்ந்த வெண்ணிலாவுக்கு போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு துரைராஜ் உயிரிழந்து விட வெண்ணிலா போச்சம்பள்ளி அருகே உள்ள குள்ளநூர் கிராமத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அங்கு லட்சுமி ஹைடெக் என்ற பெயரில் பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வந்தார். அதில் வெண்ணிலாவுக்கு துணையாக ராசி நகர் பகுதியில் சேர்ந்த சம்ரா என்பவரை வேலைக்கு வைத்துள்ளார். கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சம்ரா வெண்ணிலாவுடன் குடும்பத்தில் ஒருவர் போல பழகி வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சம்ரா தனது கணவரான சிராஜ்தினுக்கு வேலை வேண்டுமென்று கேட்டதை தொடர்ந்து அவரை வெண்ணிலா தன்னுடைய காருக்கு டிரைவராக வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

அந்தப் பகுதியிலேயே வீடு ஒன்றையும் வாடகைக்கு எடுத்து அதில் சிராஜ்தின் மற்றும் அவருடைய மனைவியை தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து பியூட்டி பார்லர் சம்பந்தமாக பல பகுதிகளுக்கு டிரைவராக சிராஜு மற்றும் உரிமையாளர் வெண்ணிலா மட்டும் சென்று வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே இருந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி வெளியே சென்று அரை எடுத்து மது அருந்துவதும் தனிமையில் உல்லாசமாக இருப்பதுமாக இருந்துள்ளனர். இதையெல்லாம் வெண்ணிலாவுக்கு தெரியாமல் சிராஜு தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளார். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமாகிய உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாரி கிருஷ்ணன் என்பவரை பிள்ளைகள் சம்மதத்துடன் வெண்ணிலா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சிராஜுடன் உள்ள பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்ட வெண்ணிலா அவரை டிரைவர் வேலையை மட்டும் பார்க்க கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வெண்ணிலாவை மிரட்டுவதற்காக அவருடன் தனிமையில் இருந்த மற்றும் மது அருந்தும் வீடியோக்களை பியூட்டி பார்லரில் வேலை செய்யும் உஷா என்பவரிடம் காட்டி, உங்க முதலாளி அம்மாவ பாரு, அவங்க சரியில்ல, அவங்க கேரக்டரை பாரு எனக்கூறி உள்ளார். இதனை உஷா தனது கடை உரிமையாளரிடம் தெரிவித்த நிலையில் வெண்ணிலா உடனடியாக சிராஜு மற்றும் அவருடைய மனைவியை அழைத்து இனிமையை நீங்க இங்க வேலைக்கு வராதீங்க என்று கூறி அனுப்பியுள்ளார்.

பிறகு சில நாட்கள் கழித்து வெண்ணிலாவுக்கு போன் செய்த சிராஜு என்னிடம் இருக்கும் வீடியோக்களை whatsapp மற்றும் facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன வெண்ணிலா அவரை அழைத்து பேரம் பேசி உள்ளார். அதற்கு அவர் ஒத்து வராத நிலையில் கடந்த நான்காம் தேதி காலை வீட்டிலிருந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு வெண்ணிலா தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

பட்டப்பகலில் பயங்கரம்… காவல் நிலையம் அருகே கார் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு… 7 பேர் ரத்த வெள்ளத்தில் சுருண்ட சம்பவம்… ஷாக்கிங் வீடியோ….!

ஹரியானாவின் சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகே பட்டப்பகலில் நடந்த பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 7 பேர்…

4 minutes ago

“விஜய் அங்கிள் பாவம்ப்பா”…. சட்டமன்றத்தில் குண்டை தூக்கி போட்ட எம்.எல்.ஏ மகள்கள்… ரகசியத்தை அவையிலேயே போட்டு உடைத்த திமுக எம்.எல்.ஏ…!

தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவை நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டியைப் போல பொதுமக்கள்…

21 minutes ago

சமையலறையில் ஒளிந்த மனைவி… இரக்கமின்றி கொன்ற கணவன்…. வெப்சீரிஸ் பாணியில் அரங்கேறிய பயங்கரம்…. திடுக்கிடும் பின்னணி…..!

கிழக்கு டெல்லியில் சொத்து தகராறு காரணமாக 'தி ஸ்டேர்கேஸ்' என்ற வெப் சீரிஸைப் பார்த்துத் திட்டமிட்டு மனைவியைக் கொடூரமாகக் கொலை…

38 minutes ago

“சட்டசபையில் பொங்கி எழுந்த பிரேமலதா”…. ‘அண்ணன் ஓபிஎஸ்’ கொடுத்த அல்டிமேட் காமெடி பதிலடி… கலகலத்த தமிழக சட்டமன்றம்…!

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இடையே நடந்த சுவாரசியமான உரையாடல்…

46 minutes ago

#BREAKING: விவாகரத்தை வாபஸ் வாங்கிய சங்கீதா…. நீதிமன்றத்தில் பரபரப்பு திருப்பம்…. CM விஜய் மகிழ்ச்சி…!

தமிழக முதலமைச்சரும், முன்னணி நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை அவரது…

51 minutes ago

“இபிஎஸ் பேரு சொல்லுங்க அண்ணே”…. அவையிலேயே கூச்சலிட்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்…. அலட்டிக்கொள்ளாத வேலுமணி…. அடுத்த பரபரப்பு…!

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அதிமுக மற்றும் ஆளும் திமுக இடையே காரசார விவாதங்கள் எழுந்த நிலையில், முன்னாள்…

2 மணத்தியாலங்கள் ago