Categories: சினிமா

ஆகஸ்ட் 8-ல் நிச்சயம் முடிக்க காரணம் இதுதான்.. அவங்க ரெண்டு பேரும்.. விளக்கமளித்த நாகர்ஜுனா..!!

Spread the love

பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகன் நாக சைதன்யா கடந்த 2009-ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017-ஆம் ஆண்டு கோவாவில் வைத்து சமந்தாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சமந்தா கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை இன்று வரை வெளிப்படையாக கூறவில்லை. மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு நோயில் இருந்து மீண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இதற்கிடையே நாக சைதன்யாவும் பிரபல நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் செய்திகள் உலா வந்தது. இது குறித்து இருவரும் விளக்கம் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதாவுக்கும் எளிமையாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. சமந்தா ஆகஸ்ட் 8-ஆம் தேதி தான் நாக சைதன்யாவிடம் தனது காதலை கூறினாராம்.

எனவே அதே தேதியில் வேண்டுமென்றே நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் பேசி வந்தனர். இந்த நிலையில் நாகர்ஜுனா தனது மகனுக்கு நிச்சயம் நடத்தி வைத்தது குறித்து பேசி இருந்தார். அவர் கூறியதாவது, ஆகஸ்ட் 8ஆம் தேதி ரொம்பவே நல்ல நாளாக இருந்தது. அதனால் தான் அன்றைய நாளில் அவசர அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்தினோம். சோபிதாவும் நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் உடனடியாக நிச்சயத்தை முடித்து விட்டோம். திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.

admin

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago