பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவு வைப்பது ஏன் தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…

Spread the love

பொதுவாக பொங்கல், தீபாவளி, சித்திரை விசு அமாவாசை போன்ற இந்து பண்டிகைகளின் போது நம் வீட்டில் பெரியோர்கள் சாப்பாடு சமையல் செய்து முடித்தவுடன் ஒரு சிறிய தட்டிலோ வாழை இலையிலோ உணவை வைத்து மொட்டை மாடியில் கொண்டு காகத்திற்கு வைப்பதை நாம் பார்த்திருப்போம். அதுவும் எச்சில் படாமல் முதன்முதலாக காகத்திற்கு வைக்க வேண்டும் என்றும் சொல்வார்கள். அப்படி நம் முன்னோர்கள் காகத்திற்கு பண்டிகை நாட்களில் உணவு வைப்பதற்கான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?. அதைப்பற்றி இனி விரிவாக பார்ப்போம்.

சனீஸ்வர பகவானின் வாகனம் தான் காகம். அதனால் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம். மேலும் எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழும் இடம் சென்று அவர்களின் நிலையை தெரிந்து கொள்வாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். பண்டிகை நாட்களில் காகத்திற்கு உணவிடும்போது சனி பகவான் மற்றும் எமதர்மன் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம்.

பொங்கல், தீபாவளி, சித்திரை வருடப்பிறப்பு போன்ற விசேஷ நாட்களிலும் மற்றும் மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற தினங்களிலும் காக்கைகளுக்கு உணவளிப்பது முக்கியமான ஒன்றாகவும் தவறாமல் எல்லோர் வீட்டிலும் கடைப்பிடிக்கும் வழக்கம்மாகவும் இருக்கிறது. காக்கைகள் மறைந்த நம் வீட்டின் முன்னோர்களின் அம்சமாகவும் கருதப்படுகிறது.

அதனால் காக்கைகளுக்கு உணவளிப்பது நம் முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து நாம் படைக்கும் உணவுகளை சாப்பிடுவதாக ஐதீகம். ஏன் மற்ற பறவையினத்தை விட்டுவிட்டு காகத்தை வழிபடுகிறார்கள் தெரியுமா? அதற்கான காரணம் காகங்கள் மிகவும் சுத்தமானவை. தினசரி இரண்டு முறை குளிக்கும். தனது துணை இறந்தால் வேறு துணை தேடாது. தூய்மையான ஒழுக்கமான பறவை காகம். ஒற்றுமையாக கூட்டமாக ஒன்று கூடி சாப்பிடும் ஒற்றுமையின் சின்னமாக காகம் பார்க்கப்படுகிறது. தனது இனத்தை சேர்ந்த ஒரு காகம் இறந்து விட்டால் ஒன்று கூடி துக்கம் அனுஷ்டிக்கும். எனவேதான் காகங்களை பித்துருக்களாக நினைத்து அதற்கு உணவளிக்கிறார்கள்.

நம்மால் தினசரி பல பேருக்கு அன்னதானம் செய்ய முடியாது அப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள் ஒரு கைப்பிடி உணவு காகத்திற்கு வைத்தால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். முக்கியமாக அமாவாசை நாட்களில் காகத்திற்கு உணவு வைக்க வேண்டும். நாம் வைக்கும் உணவை காகம் எடுத்து சாப்பிட்டு விட்டால் நம் முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி நாம் வைக்கும் உணவை காகம் சாப்பிடாவிட்டால் நம் முன்னோர்கள் ஏதோ வருத்தத்தில் இருக்கிறார்கள் அவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

காக்கைக்கு உணவளிப்பதன் மூலம் சனி தோஷம், பித்ரு தோஷம் விலகுவதால் நம் வீட்டில் சங்கடங்கள் விலகி, குடும்ப ஒற்றுமை மேம்படும். சுப காரியங்கள் நடக்கும். முன்னோர்களின் ஆசி கிடைத்து வம்சம் தலைக்கும், செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.

admin

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

1 மணத்தியாலம் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago