#image_title
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு என ஒரு பல்துறை வித்தகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மூன்றாம் பிறை, நாயகன் மற்றும் இந்தியன் ஆகிய மூன்று திரைப்படங்களுக்காக தேசிய விருது பெற்றுள்ளார்.
தன்னுடைய படங்களில் திறமையானவர்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக இருப்பார். அதுபோல திறமையானவர்களைக் கண்டால் அவர்களுக்கான வாய்ப்புகளை எப்படியாவது தன்னுடைய கம்பெனியில் கொடுக்கவேண்டும் என ஆசைப்படுவார்.
அப்படி பல திறமையானவர்களைக் கண்டறிந்து தன் படத்தில் வாய்ப்புக் கொடுத்துள்ளார். நாசர், ரமேஷ் அரவிந்த், வடிவேலு, ஊர்வசி மற்றும் ரோகிணி போன்றவர்கள் கமல்ஹாசனோடு இணைந்து பணியாற்றிய பின்னர் புதிய அந்தஸ்தைப் பெற்றனர். அதே போல அவர்கள் கமல் படத்தில் மட்டும் மிகவும் வித்தியாசமாகத் தெரிவார்கள்.
அந்த வகையில்தான் நடன இயக்குனர்களையும் தன் படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்தினார். பிரபுதேவா, ராஜு சுந்தரம் எல்லாம் ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசன் படத்தில் பணியாற்றியுள்ளார்கள். இதே போல நடன இயக்குனர் கல்யாண், கமல்ஹாசனின் பல படங்களில் க்ரூப் டான்ஸராக நடனமாடியுள்ளார்.
பின்னர் அவர் மாஸ்டர் ஆன போது ‘வசூல் ராஜா எம் பி பி எஸ்’ எனும் திரைப்படத்தில் ‘கலக்கப் போவது யாரு ‘ என்ற பாடலில் கமல்ஹாசனுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். அப்போது கமல்ஹாசனோடு பணியாற்றிய அனுபவங்களை அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.
அதில் “அந்த பாடலில் நான் சில இடங்களில் அவர் முக பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூறினேன். அதைக் கேட்ட அவர் ‘நீங்கள் நடித்துக் காட்டுங்கள்’ என்றார். நான் எப்படி சார் உங்களுக்கு நடித்துக் காட்டுவது எனத் தயங்கினேன். அப்போது அவர் “நீங்கள் எதாவது புதுசா செஞ்சு காட்டூவிங்கள்ல. அதுல இருந்து நான் எதாவது கத்துக்கலாம்ல என்றார். அந்த வார்த்தை என் நெஞ்சைத் தொட்டுவிட்டது. அவர் எவ்ளோ பெரிய சீனியர் நடிகர். நம்மிடம் எதாவது கத்துக்கலாம்னு அவர் நெனைக்குறாரு. எவ்ளோ பெரிய விஷயம்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.
ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…
பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…
தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…