Categories: சினிமா

அந்த விஷயமா நீங்க எதுவும் என்கிட்ட பேசவேண்டாம் சார்… குருநாதர் பாலச்சந்தர் முகத்திலடித்த மாதிரி பேசிய விசு… அப்படி என்ன நடந்தது?

Spread the love

தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர் விசு. இவர் இயக்கி நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. நாடகத்துறையில் இருக்கும்போது விசு ‘உறவுக்கு கைகொடுப்போம்’ என்ற நாடகத்துக்குக் கதை எழுதினார்.

அதன் பின்னர் பல நாடகங்கள் எழுதி இயக்கி, சினிமாவில் பாலச்சந்தரின் உதவி இயக்குனராக சேர்ந்து அவர் படங்களுக்கு கதை வசனம் எழுதி பின்னர் தானே இயக்குனராகவும் நடிகராகவும் உயர்ந்தவர். அவர் முதன் முதலில் இயக்கிய மணல் கயிறு மற்றும் சிதம்பர ரகசியம் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்ஸ்களாக அமைந்தன.

அவரை புகழின் உச்சத்துக்கு அழைத்துச் சென்ற படம்தான் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படம். மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து சூப்பர்ஹிட் ஆன அந்த படம் வசூலை வாரிக் குவித்ததோடு தேசிய விருதையும் பெற்றது. வெறும் 15 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் விசுவுடன் ரகுவரன், லட்சுமி, கமலா காமேஷ், மனோரமா, சந்திரசேகர், காஜா ஷெரீப், டெல்லிகணேஷ் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இப்படி தனக்கென ஒரு பார்முலாவை உருவாக்கிக் கொண்டு மினிமம் பட்ஜெட்டில் தன்னுடைய படங்களுக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொண்டு படங்களை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது தன்னுடைய படத்தில் நடிக்கக் கமிட்டாகியிருந்த மாதுரி என்ற நடிகை பாலச்சந்தர் தயாரிப்பில் ரஜினி படம் ஒன்றிலும் நடித்து வந்தாராம்.

அவர் விசு படத்துக்காக கொடுத்த கால்ஷீட் தேதியில் அவரை அவசரமாக ரஜினி பட ஷூட்டிங்குக்காக பம்பாய்க்கு அனுப்பிவிட்டார்களாம். இதற்காக விசுவிடம் முன் அனுமதி பெறாமல் பின்னர் போன் செய்து சொன்னாராம் தயாரிப்பு நிர்வாகியான பிரமீட் நடராஜன். அதைக் கேட்டு கோபமான விசு “ரஜினி மட்டும்தான் நடிகரா, அவர் மட்டும்தான் படம் நடிக்கிறாரா. நாங்கள் எல்லாம் படம் எடுக்கவில்லையா? நீங்கள் செய்தது தப்பு. போனை வையுங்கள்” என சொல்லிவிட்டாராம்.

அவரை சமாதானப்படுத்தலாம் என்று குருநாதர் பாலச்சந்தரே போன் செய்துள்ளார். அப்போது அவரிடம் விசு “சார் நீங்க அந்த பொண்ணு விஷயமாதான் பேசப் போறீங்கன்னா பேசுறதுக்கு எதுவும் இல்ல. வேற விஷயம்னா பேசலாம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாராம். அந்தளவுக்கு விசு கோபக் காரர் என்று அவரின் பல படங்களில் இணைந்து நடித்துள்ள டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

8 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

8 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

8 மணத்தியாலங்கள் ago