#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திருசிற்றம்பலம் படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.
பிரபல மலையாள நடிகையான நித்யா மேனன் ஓகே கண்மணி, மெர்சல், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். திருசிற்றம்பலம் படத்தில் நித்தியாமேனனின் ஷோபனா கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இந்த நிலையில் ஃபிலிம் ஃபேர் விருது விழாவில் திருச்சிற்றம்பலம் படத்தின் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அந்த விருதை நடிகர் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு படத்திற்காக ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்து ஒரே நேரத்தில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கான விருதை வாங்குவது என்பது மிகவும் அரிதான விஷயம். திருவும் சோபனாவும் ரொம்ப ஸ்பெஷல். திருவை அழகாக காட்டியதற்கு நன்றி ஷோபனா என பதிவிட்டுள்ளார். அந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…
ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், அரசுக்குச் சொந்தமான ஆவின் நிறுவனம் தனது பால் சார்ந்த உபபொருட்களின் விலையை…
கோவை பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர் அகிலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாகப்…
தமிழகத்தில் "லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம்; ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விட்டுவிட மாட்டோம்" என்று முதலமைச்சர் விஜய்…