நகைக்கடன் தள்ளுபடி எதிர்பார்ப்பு… கடும் ஏமாற்றத்தில் மக்கள்..!!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கடந்த 2021 தேர்தலைப் போலவே இந்த முறையும் 5 சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நேற்று நடைபெற்ற தி.மு.க.வின் பிரம்மாண்ட மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநாட்டு உரையில் இது போன்ற கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாதது பொதுமக்களிடையே ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இதை அறிவிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் நடைபெறவுள்ள அரசு விழாக்களிலோ அல்லது தேர்தல் அறிக்கை வெளியிடும் போதோ, 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைச் சமாளிக்கவும், மக்களின் வாக்குகளைக் கவரவும் இந்த அறிவிப்பு ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும் என்பதால், பொதுமக்கள் தொடர்ந்து அரசின் அடுத்தகட்ட நகர்வுகளை உற்றுநோக்கி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

திடீர் யு-டர்ன்..! ரூ. 20,000 கோடி ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுகிறது தமிழக அரசு..? அதிரடி பின்னணி..!!

தமிழகத்தில் நுகர்வோரின் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மின்வாரிய ஊழியர்களின் உதவியின்றிச் செயல்படும் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பிலான ‘ஸ்மார்ட்…

19 minutes ago

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

20 minutes ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

29 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

32 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

38 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

38 minutes ago