பிரியாணிக்கும் தோசைக்கும் ‘டாட்டா’… சிலிண்டர் தட்டுப்பாட்டால் முடங்கும் உணவகங்கள்… குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!

Spread the love

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வணிக எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, உணவகங்கள் தங்களது உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், ஹோட்டல்களுக்குத் தேவையான சிலிண்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, அதிக நேரம் அடுப்பு எரிய வேண்டிய சைனீஸ் உணவுகள், வட இந்திய துரித உணவுகள் மற்றும் தோசை போன்றவற்றைத் தயாரிப்பதைக் குறைத்துவிட்டு, குறைந்த எரிவாயுவில் சமைக்கக்கூடிய இட்லி, சப்பாத்தி மற்றும் கலவை சாதம் போன்றவற்றை மட்டுமே வழங்க உணவக உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தத் திடீர் நெருக்கடியால் உணவகங்கள் செயல்படும் நேரமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. காலை, மதியம் மற்றும் இரவு என குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே உணவகங்கள் திறந்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உணவகத் தொழிலாளர்கள், குறிப்பாக வட இந்திய சமையல் கலைஞர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பேரிடர் காலத்தில்கூட இத்தகைய எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொண்டதில்லை என வருத்தம் தெரிவிக்கும் உரிமையாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இந்தச் சிக்கலைத் தீர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Rajeshwari

Recent Posts

அடங்காத ஆத்திரம்… தீராத ரத்தவெறி.. துப்பாக்கியுடன் தேடிச்சென்று… மனைவியின் உயிரைப் பறித்துவிட்டுத் தானும் பிணமான கணவன்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த மிதுன் (27) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த போக்கன் குமாரி (25) ஆகிய…

15 minutes ago

“தெருவில் காட்டிய வித்தை” ஒரே ஒரு வீடியோ… சிறுவனின் வாழ்க்கையை மாற்றப் போகும் ஆனந்த் மகிந்திராவின் ஒற்றை ட்வீட்..!!

உத்தரகாண்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நைனிதால் வீதிகளில், ஒரு சிறுவன் பொதுமக்களுக்கு முன்னால் அசாத்தியமான மேஜிக் வித்தைகளைக் காட்டும் வீடியோ…

26 minutes ago

“அந்தமான் கடலுக்கு அடியில் கிடைத்த ‘புதையல்’!.. இந்தியாவுக்கு அடித்த பிரம்மாண்ட அதிர்ஷ்டம்.. அலறும் உலக நாடுகள்.. வெளியான மாஸ் வீடியோ”..!!

இந்திய அரசின் பொதுத்துறை ‘மகாரத்னா’ நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட், அந்தமான் கடற்பகுதியின் ஆழமற்ற ஆய்வு வளையத்தில் புதிதாக இயற்கை…

41 minutes ago

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

53 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

60 minutes ago