தமிழகத்தில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பயன்பெறும் ‘AAY’ மற்றும் ‘PHH’ வகை ரேஷன் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் e-KYC சரிபார்ப்பை ஜூலை 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார். தகுதியுள்ள ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சரியாகச் சென்று சேருவதை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவுமே மாநிலம் முழுவதும் இச்செயல்முறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த ஊரை விட்டுத் தற்காலிகமாக வெளியூர்களில் தங்கியிருப்பவர்களும், தங்களுக்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளிலேயே இச்சரிபார்ப்பைச் செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
நேரில் செல்ல முடியாத வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே ஊழியர்கள் நேரில் சென்று கைரேகைச் சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், குடும்பத்தில் காலமான உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்குரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் இலவச மற்றும் மானிய விலைப் பொருட்களைத் தடங்கலின்றிப் பெறுவதற்குத் தகுதியான பயனாளிகள் அனைவரும் இந்த e-KYC சரிபார்ப்பை குறித்த காலக்கெடுவிற்குள் முடிப்பது அவசியமாகும்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…