பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ராமதாஸ் நடத்திய பொது குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதால் மேலும் இருவருக்கு இடையேயான மோதல் அதிகரித்தது.
இந்நிலையில் 2026 தேர்தலுக்காக வலுவான கூட்டணியை அமைக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. தற்போது அதிமுகவுடன் பாஜக என்ற பெரிய கட்சி மட்டுமே இருப்பதால் வலுவான கூட்டணி இல்லை என்ற விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இதனால் விரைவாக பாமக, DMDK ஆகிய கட்சிகளை சேர்க்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பாமகவில் தந்தை மற்றும் மகன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இணைந்து செயல்பட அன்புமணிக்கு இபிஎஸ் தரப்பிலிருந்து தூது அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…