அதிமுக கூட்டணியில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதிப் பங்கீட்டு இழுபறி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகத்தால் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக, 40 தொகுதிகள் வரை டிமாண்ட் செய்த பாஜகவை, கள நிலவரம் மற்றும் கடந்த கால வெற்றி விகிதங்களை (Strike Rate) சுட்டிக்காட்டி 27 இடங்களுக்குள் சுருக்கியிருப்பது அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டெல்லி மேலிடத்தின் அழுத்தங்களுக்குப் பணியாமல், “கூட்டணியை வழிநடத்துவது அதிமுக தான்” என்பதில் இபிஎஸ் காட்டிய உறுதி, அக்கட்சித் தொண்டர்களிடையே ‘கெத்து’ பிம்பத்தை உருவாக்கியுள்ளது.
திமுக கூட்டணியில் வெறும் 4% வாக்கு வங்கி கொண்ட காங்கிரஸிற்கு 28 இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தேசிய அளவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவை 27 இடங்களுடன் எடப்பாடி கட்டுப்படுத்தியிருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. திமுகவின் “பாஜகவின் நிழல் அதிமுக” என்ற பரப்புரையை உடைக்கும் வகையில், அமித் ஷா போன்ற ஜாம்பவான்களிடமே கறாராகப் பேசி சீட் மேஜிக் செய்துள்ளார். டெல்லிக்கு நேரில் சென்றும், பின்னர் டெல்லி பிரதிநிதிகளை சென்னைக்கு வரவழைத்தும் தனது பிடி தளராமல் காய்களை நகர்த்தியுள்ளார் ‘சேலத்துக்காரர்’.
மறுபுறம், கூட்டணியில் உள்ள பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளையும் லாவகமாகக் கையாண்டுள்ளார் இபிஎஸ். கடந்த முறை 23 இடங்களில் போட்டியிட்ட பாமகவை 18 இடங்களுக்குச் சம்மதிக்க வைத்ததுடன், ஒருகாலத்தில் தன்னை ஓரம் கட்ட நினைத்த டிடிவி தினகரனை 11 தொகுதிகளுடன் தனது தலைமைக்குக் கீழ் கொண்டு வந்துள்ளார். “ஜெயிக்கிற குதிரைக்குத்தான் அதிக இடம்” என்கிற லாஜிக்கை முன்வைத்து, அனைத்துக் கட்சிகளையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்திருப்பது எடப்பாடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்லலாம்.
பாஜக, பாமக, அமமுக எனப் பெரிய பட்டாளமே இருந்தாலும், தலைமைப் பொறுப்பைத் தன் வசமே வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆடியிருக்கும் இந்த ‘சீட் கேம்’ அதிமுகவினருக்குப் புத்துயிர் அளித்துள்ளது. கூட்டணி வியூகம் தெரியாது என்று விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தப் பங்கீடு அமைந்துள்ளது. இனி 170 தொகுதிகளில் நேரடியாகக் களம் காணும் அதிமுகவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரா எடப்பாடி என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…