“அந்த ஒரு தொகுதி கிடைச்சா போதும்..” – டெல்லியை அதிரவைத்த அண்ணாமலையின் கண்டிஷன்… அதிமுக கூட்டணிக்குள் அடுத்த அதிரடி….!

Spread the love

சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்த அவர், இது குறித்து தீவிர ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு இம்முறை 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்தமான தொகுதிகளைப் பெற டெல்லி மேலிடத்திடம் காய் நகர்த்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகத் தமிழக பாஜகவின் முக்கிய நிகழ்வுகளில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. பியூஷ் கோயல் சென்னை வந்தபோது அவரை வரவேற்கச் செல்லாத அண்ணாமலை, கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவர் கோவையிலேயே போட்டியிட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே, தற்போது பியூஷ் கோயலிடம் தொகுதி தொடர்பான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அண்ணாமலை, இம்முறை தனது செல்வாக்கு மிகுந்த கொங்கு மண்டலத்திலேயே களம் காண முடிவு செய்துள்ளார். குறிப்பாக, சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகள் பாஜகவுக்குச் சாதகமாக இருக்கும் என அவர் கருதுகிறார். ஒரு மாத கால அவகாசத்தில் வெற்றியை உறுதி செய்ய வேண்டியிருப்பதால், வேட்பாளர் பட்டியலை விரைவாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலிடத்தை வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், அதிமுக கூட்டணியில் கோவையில் பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுமா என்பதில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. பல்லடம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக அதிமுக தரப்பில் கூறப்பட்டாலும், அண்ணாமலை கோவை நகர்ப்புறத் தொகுதிகளையே குறிவைத்து வருகிறார். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் போது, அண்ணாமலை விரும்பிய தொகுதி அவருக்குக் கிடைக்குமா அல்லது கூட்டணி கணக்குகளுக்காக அவர் சமரசம் செய்து கொள்வாரா என்பது தெரியவரும்.

Nanthini

Recent Posts

ஐயோ கடவுளே… சிதறியிருக்க வேண்டிய பசு… அதிவேக இரயில் மோதிய நொடியில் நடந்த… நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப்பிரதேசத்தில் அதிவேகமாக வந்த இரயில் ஒன்று தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பசுவின் மீது மோதிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.…

5 minutes ago

அப்படி போடு… நள்ளிரவில் வரிசையாக போன்களை ஆட்டையைப் போட்ட திருடன்… கயிற்றால் நாற்காலியில் கட்டி வைத்து… போலீசில் ஒப்படைத்த செக்யூரிட்டி… பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் மெரைன் டிரைவ் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் கைபேசிகளை நள்ளிரவில் திருட முயன்ற…

9 minutes ago

அய்யய்யோ… ஹெட்லைட்டை திறந்ததும்… உறைந்து போன உரிமையாளர்… பைக்கிற்குள் ஒளிந்திருந்த பாம்பு… திக் திக் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட்டின் தாபோடி பகுதியில், இருசக்கர வாகனத்தின் முகப்பு விளக்கு பகுதிக்குள் மறைந்திருந்த விஷமற்ற பாம்பு ஒன்று பத்திரமாக…

19 minutes ago

அச்சச்சோ… அக்கா திரிஷா விவகாரத்தில்… கொதித்த நற்பணி மன்றம்… உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக… மதுரையில் போஸ்டர் போர்… அரசியலில் பரபரப்பு…!

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவேரி நீர் பிரச்சனை குறித்துப் பேசுகையில் தொண்டர்கள் சிலர்…

25 minutes ago

“விமானத்தில் பயங்கர குலுங்கல்…” வீடியோவைப் பகிர வேண்டாம் எனக் கெஞ்சிய ஊழியர்கள்…? 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்…நடுவானில் அரங்கேறிய பயங்கரம்…!!

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…

40 minutes ago

ஷாக்… உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி… விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் ஐபிஎஸ் அதிகாரி?… திடுக்கிடும் பின்னணி…!

தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…

51 minutes ago