“விமானத்தில் பயங்கர குலுங்கல்…” வீடியோவைப் பகிர வேண்டாம் எனக் கெஞ்சிய ஊழியர்கள்…? 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்…நடுவானில் அரங்கேறிய பயங்கரம்…!!

Spread the love

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத விதமாகக் கடுமையான காற்றில் சிக்கியது. இதன் காரணமாக விமானம் திடீரென சுமார் 300 அடி தூரம் கீழே சரிந்ததால், நிலைதடுமாறி உள்ளிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர். இதில் பத்து பயணிகள் உட்பட 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது விமானத்தின் உள்கூரை சேதமடைந்ததுடன், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் குலுங்கல் சுமார் இரண்டு நிமிடங்கள் நீடித்து பயணிகளைப் பீதியில் ஆழ்த்தியது.

https://www.instagram.com/reel/Dbnk0k-TLjb/?utm_source=ig_web_copy_link&igsh=NTc4MTIwNjQ2YQ==

இந்நிலையில், இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவேற்ற வேண்டாம் என்றும், அது ஏர் இந்தியா நிறுவனத்தின் புகழைக் கெடுத்துவிடும் என்றும் விமான ஊழியர்கள் தங்களைக் கேட்டுக்கொண்டதாகப் பயணி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக லக்னோவில் அவசரத் தரையிறக்கம் செய்யாமல் டெல்லிக்குக் கொண்டு சென்றதாகவும், அங்குத் தரையிறங்கிய பிறகும் போதிய மருத்துவ உதவியோ அல்லது சக்கர நாற்காலிகளோ உடனடியாக வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாகப் விமானப் போக்குவரத்துச் தலைமை இயக்குநரகம் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“வெளிநாட்டுப் பணத்தை வாங்கி குவித்த பெண் காவலர்”… இறுதியில் கணவன் செய்த அந்த ஒரு வேலை…. திருவாரூரில் அதிர்ச்சி திருப்பம்….!

திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (36). வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பிய…

4 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! பாதசாரிகள் மீது மோதிய சொகுசு கார்…! 7 பேர் படுகாயம்…. நடுங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கமலா நகர் பகுதியில், மதுபோதையில் அதிவேகமாகச் சொகுசு காரை ஓட்டி வந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர்,…

9 minutes ago

மாடலிங் ஆசைக்கு இடையூறு… பெற்ற 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்…. கேரளாவில் கொடூரம்….!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோழிஞ்சம்பாறை மேனன்பாறையில், தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைத் தாயே கொடூரமாகக் கொலை செய்து…

10 minutes ago

“நாங்க நோட்டீஸ் தர்றோம்… அவங்க பணம் தர்றாங்க”….. சீறிய பெ.சண்முகம்… இடைத்தேர்தல் களத்தில் தவெக மீது பாயும் குற்றச்சாட்டு….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

15 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! குறுக்கே பாய்ந்த தெரு நாய்…! நடுரோட்டில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகன ஓட்டி… பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

சாலையில் திடீரெனக் குறுக்கே பாய்ந்த தெரு நாயால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் நிலைதடுமாறி நடுரோட்டில் விழுந்து, எதிரே…

24 minutes ago