ஹீரோ, ஹீரோயின் ஒன்றாக இல்லாமலே டூயட் பாடலை படமாக்கிய ஜெயம் ரவியின் தந்தை.. பெரிய வித்தைக்காரரா இருப்பாரு போலயே?

By Mahalakshmi

Published on:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் ஜெயம் ரவி.  இவரது குடும்பமே சினிமா துறையை சேர்ந்த குடும்பம் . இவரது அண்ணன் மோகன் ராஜா பிரபலமான இயக்குனராக இருக்கின்றார். இவரது தந்தை எடிட்டர் மோகன். 70ஸ் 80ஸ் காலகட்டத்தில் பல திரைப்படங்களுக்கு எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். அவர் செய்த ஒரு சிறப்பான சம்பவத்தை பற்றி பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் சில தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார்.

   

எடிட்டர் மோகன் தயாரித்த நேரடி தமிழ் திரைப்படம் என்றால் அது ஒரு தொட்டில் சபதம் என்கின்ற திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக ராம்கி மற்றும் கதாநாயகியாக சீதா நடித்திருப்பார்கள். அந்த படத்தினுடைய வெளியீடு தேதியை வெளியிட்ட சூழ்நிலையில் அப்படத்தில் ஒரு பாடல் காட்சியை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று எடிட்டர் மோகனுக்கு தோன்றியது. உடனே படத்தின் இசையமைப்பாளராக இருந்த சந்திரபோசை வர சொல்லி ஒரு புது பாடலை எழுத வேண்டும் என்று கூறுகிறார்.

அந்த பாடலும் பிரமாதமாக வந்து விடுகின்றது. ‘ராத்திரி நேரத்திலே’ என்று தொடங்கக்கூடிய இந்த பாடலை பாடகர்கள் மனோ மற்றும் லலிதா சாகரி ஆகியோர் இந்த பாடலை பாடியிருந்தார்கள். இந்த பாடலை படமாக்குவதற்கு ராம்கி கால்ஷீட் கேட்டபோது அவர் இரண்டு நாட்கள் மட்டுமே நான் சென்னையில் இருப்பேன் அதன் பிறகு நான் காஷ்மீர் சென்று விடுவேன் என்று கூறிவிட்டார்.

அடுத்ததாக நடிகை சீதாவிடம் கேட்டபோது ஆந்திராவில் ஒரு படத்தில் பிஸியாக இருப்பதால் என்னால் மூன்று நாளைக்கு சென்னை வர முடியாது என்று கூறிவிட்டார்.  பின்னர் புத்திசாலித்தனமாக யோசித்த எடிட்டர் மோகன் அப்படத்தினுடைய டான்ஸ் மாஸ்டர் ஜான் பாபுவையும் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக்கையும் அழைத்தார். முதல் இரண்டு நாட்கள் ராம்கி வைத்துக்கொண்டு சீதாவிற்கு பதிலாக டூப் போட்டும் அடுத்து மூன்று நாட்களுக்கு பிறகு ராம்கிக்கு டூர் போட்டு சீதாவை வைத்தும் பாடல் காட்சிகளை எடுத்து முடித்தார்.

பின்னர் இரண்டையும் எடிட் செய்து பாடலை வெளியிட்டார். இந்த பாடல் மீது பலருக்கும் நம்பிக்கை இல்லாமல் இருந்தார்கள். எடிட்டிங் முடித்துவிட்டு பார்த்தபோது பாடல் காட்சி மிகவும் அருமையாக வந்திருந்தது. இந்த சம்பவத்தை ஒரு மறக்க முடியாத அனுபவமாக பகிர்ந்திருக்கிறார் சீதா லட்சுமணன்.

author avatar
Mahalakshmi