அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரிங்கி புயான் சர்மா மீது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெர்ரா ஊழல் புகார்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ரிங்கி புயான் மூன்று பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளதாகவும், அவரது சொத்து விவரங்களை முதல்வர் தனது வேட்புமனுவில் மறைத்துவிட்டதாகவும் பவன் கெர்ரா குற்றம் சாட்டினார்.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். காங்கிரஸ் தலைவர்களின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த முதல்வர் ஹிமாந்தா சர்மா, மல்லிகார்ஜுன கார்கே வயதான காலத்தில் ஒரு “பைத்தியக்காரனைப் போல” பேசி வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறிவிட்டுத் தப்பியோடும் பவன் கெர்ராவை அசாம் போலீசார் பாதாளத்திற்கே சென்றாலும் விடமாட்டார்கள் என்றும், ராகுல் காந்தி கொடுத்த தவறான தகவல்களைக் கொண்டு இவர்கள் நாடகம் ஆடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ராகுல் காந்தி வரை நீளும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஓஹியோ மாநில வானில் வியக்கத்தக்க…
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான ஒரு வருட கால அரசியல் மோதல்,…
புனே நகரின் பவுட் சாலையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே, சாலையில் உள்ள தடுப்பானில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் லாரி…
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக…
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி…