தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மிகப் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. அதில் வீட்டு வேலைக்கார பெண்ணாக செல்வி கதாபாத்திரத்தில் கம்பம் மீனா நடித்து வருகிறார். அந்த சீரியல் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது துணை நடிகையாக இருக்கும் இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் நடந்துள்ளது. பின்னர் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.தன்னுடைய குடும்ப வறுமை நிலை காரணமாக எல்ஐசி ஏஜென்ட் ஆக கம்பம் மீனா பணியாற்றியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு என்ற சீரியலில் இவரை பாரதிராஜா நடிக்க வைத்துள்ளார்.
இவர் கிராமத்து வழக்கு முறையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதேசமயம் தெற்கத்தி பொண்ணு சீரியல் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமைந்தது. அதன் பிறகு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் கிட்டத்தட்ட 75 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுப்பட்டி, களவாணி மற்றும் சகுனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மறைந்த இயக்குனர் தாமிராவின் இயக்கத்தில் இயக்குனர் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா இணைந்து நடித்த இரட்டை சுழி திரைப்படத்தில் தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜாவுக்கே மருமகளாக நடித்து அசத்தினார்.
சிறுவயதில் தந்தையை இழந்து திருமணம் என்றாலும் தன்னுடைய வாழ்வில் பல தடைகளைக் கடந்து இன்று ரசிகர்கள் பலரும் கொண்டாடும் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை கம்பம் மீனா. சமீபத்தில் இவருடைய மருமகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அவருக்கு நேற்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கம்பம் மீனா இணையத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது இவர் தனது மருமகள் , மகன் , பேரக்குழந்தை மற்றும் குடும்பத்துடன் எடுத்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…