எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் எவ்வளவு பெரிய வலியமான ரோல் என்பதை தமிழக ரசிகர்கள் அறிவார்கள். அதற்கு முக்கிய காரணமாக இருந்தது நடிகர் மாரிமுத்து தான். ஆம், இயக்குனரின் சொல்லையும் தாண்டி தன்னுடைய உடல் மொழியாலும், ஏம்மா ஏய் போன்ற வசனங்களிலாலும் ஆதி குணசேகரனாக வாழ்ந்தவர் மாரிமுத்து. இவருடைய இறப்புக்கு பின் யார் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்வி எழுந்தது. முதலில் பிரபல நடிகர் வேல ராமமூர்த்தி தான் ஆதி குணசேகரனாக நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது.
அதன்பின், மற்ற சில நடிகர்களின் பெயர் கூட அடிபட்டது. ஆனால் நடிகர் வேல ராமமூர்த்தியோ ‘தற்போது பிசியாக படங்களில் நடித்து வருவதாகவும், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க தற்போது பேச்சுவார்த்தை தான் நடந்து வருகிறது, இன்னும் உறுதியாகவில்லை’ என கூறியிருந்தார். தற்போது அவரையே இறுதி செய்து ஷூட்டிங் தொடங்கி விட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வைரலாகி வந்தது.
எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து மறைவால், ஆதி குணசேகரன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என கதையை மாற்றி அமைத்திருந்தனர். தற்போது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க வந்துவிட்டதால், வீட்டை விட்டு வெளியேறிய ஆதி குணசேகரன் மீண்டும் வீட்டிற்குள் மாஸ் என்ட்ரிகொடுத்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவரை பெரும் தொகை சம்பளமாக கொடுத்து தூக்கி வந்துள்ளது எதிர்நீச்சல் குழு. அதன்படி இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரம் சம்பளமாம். இதற்கு முன்னர் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து வாங்கிய சம்பளத்தை விட இது இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…
தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…
கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…
திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…
ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…