திமுகவின் தேர்தல் கணக்கு…. ஸ்டாலினின் ‘சீக்ரெட்’ டீமில் அந்த 4 பேர் யார்?…. பிப்ரவரி 22-ல் உடையப்போகும் ‘சஸ்பென்ஸ்’….!

Spread the love

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆளும் திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சிறப்புப் பணிக் குழுவை அமைப்பது தொடர்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.

இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு மற்றும் கனிமொழி எம்.பி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் இடம்பெற வேண்டிய பிரதிநிதிகள் யார் என்பது குறித்தும், பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதிகள் கேட்டு காங்கிரஸ் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் சூழலில், அதற்கு மாற்றாக திமுக எடுக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த நான்கு நாட்களில் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, கூட்டணி கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

மைத்துனருடன் கள்ளக்காதல்…! கணவரை விட்டு பணம், நகையுடன் ஓடிய இளம்பெண்… கால்வாயில் கிடந்த சடலம்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

திருமணமான பெண் ஒருவர் தனது உறவினர் முறை உடைய மைத்துனருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பின் காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற சில…

7 minutes ago

“என்னை சித்திரவதை பண்றீங்களா…?” கணவரை பழிவாங்க மகன், 11 வயது சிறுவனை கொன்ற தாய்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த கொடுமைக்குப் பழிவாங்கும் நோக்கில், தனது 8 வயது…

17 minutes ago

“சும்மா கேஷுவலா நிற்போம்…” கடைக்குள் வந்து தங்க நகையை அபேஸ் செய்த மர்ம நபர்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாகாடி சாலை, பின்னூப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ் என்ற நகைக் கடையில், வாடிக்கையாளர் போல்…

29 minutes ago

செம பதிலடி..! இவ்வளவு சின்னதா இருக்கு?… “கூச்சமே இல்லாம பப்ளிக்கா பேசுறியே”… டிடிஎஃப் வாசனை வெளுத்து வாங்கிய முனியம்மா…!!

பிக் பாஸ் வீட்டில் அக்ஷிதா தனது படுக்கையில் வைத்திருந்த நாப்கினைப் பார்த்த டிடிஎஃப் வாசன், அதன் அளவைக் குறித்து அவரிடம்…

1 மணத்தியாலம் ago

ரஜினி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்… மார்ச் 27-ல் நடந்த மிகப்பெரிய டிவிஸ்ட்… மோகன் ராமன் பகிர்ந்த சுவாரஸ்யம்…!!

திரையுலகில் அறிமுகமாவதற்கு முன்பு சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவர், நடிப்பின் மீதான தணியாத ஆர்வத்தால் சென்னை திரைப்படக் கல்லூரியில் பயின்று,…

2 மணத்தியாலங்கள் ago

2-வது கணவரை பிரிந்தாரா தாமரை செல்வி…? இன்ஸ்டாகிராம் பெயர் மாற்றத்தால் வெடித்த சர்ச்சை… குழப்பத்தில் ரசிகர்கள்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனி இடம்பிடித்த நாட்டுப்புறக் கலைஞரும், நடிகையுமான தாமரைச் செல்வி தனது இரண்டாவது…

2 மணத்தியாலங்கள் ago