திமுக எம்பி மகன் மீது திடீர் வழக்குப்பதிவு.. அதிர்ந்து போன அறிவாலயம்.. சென்னையில் பரபரப்பு….!

Spread the love

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பியான கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த், சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ராணி, எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி மற்றும் ஆதிநாராயணன் ஆகிய 4 பேர் மீது சென்னை அண்ணா நகர் போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சித்தார்த்துக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு அவர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பண மோசடி உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசு (27) என்பவர் கடந்த 2024-ம் ஆண்டே சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தங்களுக்குச் சொந்தமான 14 கிரவுண்ட் நிலம் மற்றும் ஒரு கட்டடத்தின் சொத்து பத்திரத்தை வங்கியில் அடகு வைத்துப் பணம் வாங்கித் தருவதாகக் கூறி, தங்களை ஏமாற்றி மோசடி செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், இது குறித்துக் கேட்டபோது தங்களைச் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக அன்பரசு குற்றம் சாட்டியிருந்தார். கலாநிதி வீராசாமி ஆளுங்கட்சி எம்பி என்பதால் அவரது மகன் மீது நடவடிக்கை எடுக்கப் போலீசார் ஆரம்பத்தில் தயங்கியதாகப் புகார் எழுந்தது.

பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய சட்டப் பிரிவுகள்:

  • பிரிவு 420: மோசடி (Cheating)
  • பிரிவு 506 (1): கொலை மிரட்டல் (Criminal Intimidation)
  • எஸ்சி, எஸ்டி சட்டம்: பிரிவுகள் 3(1)(r), 3(1)(s), 3(1)(va) (வன்கொடுமை தடுப்புச் சட்டம்)

நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருந்த இந்த புகாரின் மீது, தற்போது அண்ணா நகர் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, எம்பியின் மகன் சித்தார்த், விருதுநகரைச் சேர்ந்த ஆதிநாராயணன், சென்னை அண்ணா நகர் 102-வது வார்டு திமுக கவுன்சிலர் ராணி ரவிச்சந்திரன் மற்றும் எம்பியின் உதவியாளர் ஆசைத்தம்பி ஆகிய நால்வர் மீதும் கூட்டுச் சதி, மோசடி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

4 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago