நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்!… “எம்.ஆர். விஜயபாஸ்கரை அடிக்கப் பாய்ந்த திமுகவினர்”… கரூரில் உச்சகட்ட பதற்றம்…!!!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் கோவில் இனாம் நிலப் பிரச்சினை தொடர்பாக அதிமுகவினர் இன்று தான்தோன்றிமலை பகுதியில் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்தனர். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இந்த மோதல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை, திமுகவினர் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மேலும், நோட்டீஸ் விநியோகம் செய்த அதிமுக பெண் நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியதாகக் குற்றம் சாட்டி, அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுக்கடங்காமல் சென்ற கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் திணறினர்.

தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், தேர்தலுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்துள்ள இந்த வன்முறைச் சம்பவம் கரூர் தொகுதியில் உச்சகட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Muthu Mani

Recent Posts

“திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்!” – ஜப்பான் விடுத்த மிரளவைக்கும் எச்சரிக்கை.. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம்…!

ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…

47 seconds ago

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கணவன்.. கழிப்பறையில் காத்திருந்த பயங்கரம்… தர்மபுரியை உலுக்கிய கொடூரம்…!

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…

5 minutes ago

ரோஹித் சர்மாவின் குறும்புத்தனமான வீடியோ..! திடீரென ஹோட்டலுக்கு ஓடிய ‘ஹிட்மேன்.. நடந்தது என்ன..?

ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ரோஹித்…

5 minutes ago

ஒரு முறை இதைச் சாப்பிட்டு பாருங்கள்.. அப்புறம் விடவே மாட்டீங்க!… மாலை நேர தேநீருக்கு ஒரு சூப்பர் காம்போ… கென்யா ஸ்டைல் மாண்டாசி…!!!

கென்ய நாட்டின் பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான இனிப்பு வகை சிற்றுண்டியான மாண்டாசி (Mandazi), லேசான இனிப்புச் சுவையுடன் எண்ணெயில்…

13 minutes ago

ஆவணம் இல்லையா…? அப்போ தங்கம் போச்சு…! ரூ.18 கோடி நகை பறிமுதல்…. நகைக்கடை உரிமையாளர்களுக்கு பறந்த நோட்டீஸ்…!!

சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்…

20 minutes ago

சின்னத்தம்பி “கல்யாண” நடிகர் மார்த்தாண்டன் இப்போ எங்க இருக்காரு தெரியுமா…? மனதை உலுக்கும் தற்போதைய நிலை…!!

'சின்னத்தம்பி' திரைப்படத்தில் "எனக்கு கல்யாணம்" என்று கத்திக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன், தற்போது தனது…

32 minutes ago