தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இறுதிக்கட்டப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன. பொதுக்கூட்டங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தல் எனத் தலைவர்கள் களமிறங்கியுள்ள போதிலும், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இளைஞர்களைக் கவர சமூக வலைதள மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களே முக்கிய ஆயுதமாக மாறியுள்ளன. கடந்த தேர்தல்களில் ‘வெற்றிநடை போடும் தமிழகமே’ மற்றும் அதற்குப் போட்டியாக வெளியான வீடியோக்கள் ஏற்படுத்திய தாக்கம், இம்முறையும் டிஜிட்டல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
ஆளுங்கட்சியான திமுக இம்முறை ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ளது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000, பிணையில்லா கடன் போன்ற தங்களது தேர்தல் வாக்குறுதிகளை டிஜிட்டல் விளம்பரங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அதேபோல், அதிமுக தரப்பில் திமுகவை விமர்சிக்கும் வீடியோக்கள் ஒருபுறம் வெளியாக, மறுபுறம் எடப்பாடி பழனிசாமி பாஜகவைச் சுமந்து செல்வது போன்ற திமுகவின் கிண்டல் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளன.
முக்கியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக டிஜிட்டல் தளங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் இந்த முறை தொலைக்காட்சிகளில் தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டின் தொலைக்காட்சி மற்றும் கைப்பேசி திரைகளிலும் தங்களது கருத்துக்களைக் கொண்டு சேர்ப்பதில் இந்தக் கட்சிகள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றன. டிஜிட்டல் பிரச்சாரத்தின் வலிமையை உணர்ந்துள்ள கட்சிகள், இதற்காகப் பெருமளவில் நேரத்தையும் உழைப்பையும் முதலீடு செய்துள்ளன.
ஆனால், சினிமாவில் பெரும் செல்வாக்கு பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்த டிஜிட்டல் பிரச்சாரக் களத்தில் முற்றிலும் அமைதி காப்பது அரசியல் விமர்சகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை விமர்சித்தோ அல்லது தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியோ எந்தவொரு அதிகாரப்பூர்வ வீடியோக்களையும் தவெக இதுவரை வெளியிடவில்லை. பிரச்சாரம் முடிய இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், திரையில் ஜொலிக்கும் விஜய் டிஜிட்டல் உலகப் பிரச்சாரத்தை மறந்துவிட்டாரா அல்லது இது அவரது உத்தியின் ஒரு பகுதியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு விடுத்த "திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள்" என்ற எச்சரிக்கை உலக…
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சந்தேகத்தின் பெயரால் கணவனே மனைவியைக் கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…
ஐபிஎல் 2024 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக, ரோஹித்…
கென்ய நாட்டின் பாரம்பரிய மற்றும் மிகவும் பிரபலமான இனிப்பு வகை சிற்றுண்டியான மாண்டாசி (Mandazi), லேசான இனிப்புச் சுவையுடன் எண்ணெயில்…
சென்னையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள்…
'சின்னத்தம்பி' திரைப்படத்தில் "எனக்கு கல்யாணம்" என்று கத்திக்கொண்டு மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மார்த்தாண்டன், தற்போது தனது…