ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். தமானிசையமைத்த இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழு தெரிவித்திருந்தது. சங்கரின் முந்தைய திரைப்படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியாக மாறியது. இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாற்றுமா என்ற கேள்வி இருந்து வந்தது.
இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் படத்திற்கு இரு வேறு கருத்துக்கள் பெரும்பான்மையான ரசிகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.
படத்தின் கதையை பொருத்தவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதைக்களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படியான நிலையில் படம் 220 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இந்த நிலையில் சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டியில், எனக்கு இப்பதான் தெரிஞ்சது கேம் சேஞ்சர் படத்தில் கோரியோகிராப் பண்ணதுக்கு பிரபுதேவா சம்பளமே வாங்கவில்லை என்று. தயாரிப்பாளருக்காகவும் ராம்சரண் மீது அவர் வைத்திருந்த அன்புக்காகவும் அசிஸ்டன்ட் எல்லாரையும் வைத்து சுமார் 8 நாள் ஷூட் பண்ணாரு. ஆனா அவர் அதுக்காக எந்த சம்பளத்தையும் வாங்கல. நான் டைட்டில் கார்டு போடும்போது கூட கேட்டேன், ஆனா பிரபுதேவா சார் டேக்ஸ் கார்டில் போட சொல்லிட்டாரு என சொன்னாங்க. அவருடைய உழைப்பு இந்த படத்துல நிறைந்து இருக்கு என்று சங்கர் பேசியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…