அந்தப் படத்துக்கு ஒத்த ரூபா கூட சம்பளம் வாங்காத பிரபுதேவா.. விஷயம் தெரிந்து நெகிழ்ந்து போன சங்கர்..!

By Nanthini on பங்குனி 4, 2025

Spread the love

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேம் சேஞ்சர். படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஆதித்யா ராம் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர். தமானிசையமைத்த இந்த படத்தில் உள்ள ஐந்து பாடல்களையும் உருவாக்க மட்டும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து 75 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டதாக படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பட குழு தெரிவித்திருந்தது. சங்கரின் முந்தைய திரைப்படமான இந்தியன் 2 படம் பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் படு தோல்வியாக மாறியது. இப்படியான நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சங்கரை மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆக மாற்றுமா என்ற கேள்வி இருந்து வந்தது.

கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர்

   

இந்த நிலையில் கேம் சேஞ்சர் திரைப்படம் சமீபத்தில் ரிலீசான நிலையில் படத்திற்கு இரு வேறு கருத்துக்கள் பெரும்பான்மையான ரசிகர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை சங்கர் தன்னுடைய படத்தையே மீண்டும் எடுத்து வைத்துள்ளார் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள்.

   

கேம் சேஞ்சர் படம் பாசிட்டிவாதான் சொல்றாங்க!.. ஷங்கர் எங்க வாழ்றாருன்னே  தெரியலயே!... | shankar says game changer receiving positive review

 

படத்தின் கதையை பொருத்தவரை ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் நடக்கும் மோதல் தான் கதைக்களமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படியான நிலையில் படம் 220 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Prabhu Deva | Latest Prabhu Deva News, Videos, Photos - Cinemapettai

இந்த நிலையில் சங்கர்  சமீபத்தில் அளித்த பேட்டியில்,  எனக்கு இப்பதான் தெரிஞ்சது கேம் சேஞ்சர் படத்தில் கோரியோகிராப் பண்ணதுக்கு பிரபுதேவா சம்பளமே வாங்கவில்லை என்று. தயாரிப்பாளருக்காகவும் ராம்சரண் மீது அவர் வைத்திருந்த அன்புக்காகவும் அசிஸ்டன்ட் எல்லாரையும் வைத்து சுமார் 8 நாள் ஷூட் பண்ணாரு. ஆனா அவர் அதுக்காக எந்த சம்பளத்தையும் வாங்கல. நான் டைட்டில் கார்டு போடும்போது கூட கேட்டேன், ஆனா பிரபுதேவா சார் டேக்ஸ் கார்டில் போட சொல்லிட்டாரு என சொன்னாங்க. அவருடைய உழைப்பு இந்த படத்துல நிறைந்து இருக்கு என்று சங்கர் பேசியுள்ளார்.