தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கலைவாணர் என்று அழைக்கப்பட்டவர் தான் என்.எஸ் கிருஷ்ணன். நாடகத்தில் நடிக்க தொடங்கி அதன் பிறகு சினிமாவில் நுழைந்தவர். குறிப்பாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் காமெடி செய்யும் திறமை கொண்டவர். எம்ஜிஆருக்கு குரு போல எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். எம்ஜிஆருக்கு தகுந்த நேரத்தில் நல்ல அறிவுரைகளை கூறி அவரை வழி நடத்தியவர். அதன் காரணமாக என் எஸ் கிருஷ்ணன் மீது எம்ஜிஆர்க்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கடைசி வரை இருந்தது. பல திரைப்படங்களில் மக்களுக்கு தேவையான அறிவுரையை காமெடி மூலமாக சொல்லி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் என் எஸ் கிருஷ்ணன். அது மட்டுமல்லாமல் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலான தொகையை பிறருக்கு கொடுத்து விடும் குணம் கொண்டவர்.
கஷ்டம் என வந்து யார் இவரிடம் உதவி கேட்டாலும் தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் அப்படியே கொடுத்து விடும் வள்ளலாக இருந்தார். இவரிடமிருந்து தான் பிறருக்கு உதவும் குணத்தை எம்.ஜி.ஆர் கற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கலை உலகில் என்ன கிருஷ்ணன் ஒரு கலைஞனாக மட்டுமல்லாமல் கலைவாணராகவும் மூடநம்பிக்கைகளை அகற்றும் கருத்துக்களை காமெடியாகவும் கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இல்லாதோருக்கும் இல்லை என்று வந்தோருக்கும் வாரி வாரி கொடுக்கக்கூடிய வள்ளல். இவருடைய குணம் அறிந்து அவரின் மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
ஏழை ஜாதி என்று எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் தன்னிடம் இருக்கும் பணத்தையும் நகைகளையும் கொடுத்து உதவிய வள்ளல். அந்த காலகட்டத்தில் சென்னை பாண்டி பஜாரில் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அந்த ஹோட்டலில் 20 சாப்பாடு டோக்கன்களை தினமும் வாங்கிக் கொண்டு என்.எஸ். கிருஷ்ணன் வீட்டிற்கு வந்து விடுவார். தினமும் பசியோடு தன் வீட்டிற்கு யாசகம் கேட்டு வருவோருக்கு அந்த டோக்கன்களை கொடுத்து ஹோட்டலில் சென்று சாப்பிட சொல்வாராம்.
அப்படி ஒரு நாள் அந்த ஹோட்டல் ஓனர் எதற்கு இப்படி பஞ்ச பரதேசி எல்லாம் என் ஹோட்டலுக்கு சாப்பிட அனுப்புகிறீர்கள் என்று கோபத்தோடு கேட்க, உடனே என் எஸ் கிருஷ்ணன் அதற்கு தானே நீங்கள் ஹோட்டல் நடத்துகிறீர்கள், நான் என்ன ஆடு மாடுகளையா சாப்பிட அனுப்பினேன், மனிதர்களை தான் அனுப்பினேன், நான் தான் காசு கொடுத்து டோக்கன் வாங்கிட்டேன்ல்ல, ஒழுங்கா அவங்களுக்கு சாப்பாடு போடுங்க என்று பட்டென பதில் சொல்லி உள்ளார். அது மட்டுமல்லாமல் 25 வருடங்கள் விபத்து இல்லாமல் கார் ஓட்டியதற்காக தன்னுடைய கார் டிரைவருக்கு சென்னை வாணி மகாலில் வைத்து பாராட்டு விழா நடத்தி அந்த டிரைவருக்கு 25 பவுன் தங்க நகையையும், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பரிசாக கொடுத்து கவுரவப்படுத்தினார் என் எஸ் கிருஷ்ணன்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…