தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக படம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு துணிவு திரைப்படம் வெளியான நிலையில் சுமார் இரண்டு வருட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் விடா முயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் வணிகரீதியாக படுதோல்வி படமாக மாறியது. ரசிகர்களும் இந்த படம் பிடிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. அது வசூலிலும் எதிரொலித்ததால் படம் தோல்வி படமாக மாறியது. படத்தின் மொத்த பட்ஜெட் 280 கோடி ஆகும்.
இதில் அஜித் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் என தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் என சம்பளத்திற்கு மட்டுமே மொத்தம் 140 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்புக்கு 60 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அஜித்தின் சம்பளத்திற்கு வாங்கிய பணத்திற்கு வட்டி மட்டும் ரூபாய் 50 கோடிகள் ஆகும். மற்றவைகளுக்கு வாங்கிய பணத்திற்கு வட்டி 20 கோடிகள் என வட்டி மட்டும் 70 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் சேர்த்து மொத்தம் 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் 250 கோடிகள் செலவில் படத்தை லைகா நிறுவனம் உருவாக்கியதாக தெரிகிறது. படம் ரிலீசுக்கு முன்பு நடைபெற்ற வியாபாரத்தில் மொத்தம் 156 கோடிகள் வியாபாரமாகியுள்ளது. இதனால் படம் ரிலீசுக்கு முன்னர் லைகாவுக்கு 124 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் லைகா நிறுவனம் விடாமுயற்சி திரைப்படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்தது. இப்படியான நிலையில் தமிழகத்தில் மட்டும் விடாமுயற்சி திரைப்படம் மொத்த வசூல் செய்த தொகை 81 கோடிகள் ஆகும். இதில் ரெட் ஜெயன் நிறுவனத்திற்கு லைகா நிறுவனம் கொடுக்க வேண்டிய மூன்று புள்ளி ஐந்து கோடிகள் ரிலீஸ் சார் போக ஷேர் ஆக கிடைத்தது 31.5 கோடிகள் ஆகும்.
தமிழ்நாட்டுடன் சேர்த்து இந்தியா முழுவதும் 97.43 கோடிகள் வசூல் செய்த நிலையில் வெளிநாடுகளில் 40 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டு வசூல் மூலமாக கிடைத்த ஷேர் 14 கோடிகளாகும். மொத்தம் கிடைத்த ஷேர் மட்டும் 48 கோடிகளாகும். இதில் விநியோகஸ்தர்களுக்கு திருப்பி தந்த தொகை 34 கோடிகள். இதன் மூலமாக லைகாவின் கையில் ஷேரில் மீதம் இருந்த தொகை வெறும் 14 கோடிகள் மட்டும் தான்.
படம் ரிலீசுக்கு முன்பு லைகாவுக்கு இருந்த நஷ்ட தொகை 124 கோடிகளில் ரிலீசுக்கு பின்னர் வந்த ஷேர் 14 கோடிகளை கழித்தால் நஷ்ட தொகையாக 110 கோடியாகும். அது மட்டுமல்லாமல் குட் பேட் அக்லி படத்தின் கதை பாரமவுண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பிரேக் டவுன் என்ற படத்தின் கதை என்பதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் 17.5 கோடிகளாகும். இதனால் மொத்த நஷ்ட தொகை 127.5 கோடிகளாக உள்ளது. இதுதான் விடா முயற்சி படத்தின் வரவு செலவு மற்றும் வசூல் கணக்கு என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…