சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். ஒரு நாடக கோட்டையில் காமெடியனாக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவரை, நாடகம் பார்க்க வந்த ஒரு இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர் கவனிக்க ‘ என்னுடைய அலுவலகத்தில் வேலை இருக்கிறது செய்கிறாயா? ‘என்று அவர் கேட்க, உதவி இயக்குனராக பணியில் சேர்ந்தார். ஒரு கட்டத்தில் இவருடன் வேலை செய்த அனைத்து உதவி இயக்குனர்களும் தனியே படம் எடுக்க ஆரம்பித்தனர்.
ஆனால் இவர் மட்டும் 18 படங்களுக்கும் மேல் SAC அவர்களிடம் உதவி இயக்குநராகவே இருந்துள்ளார். முதன்முதலில் இவர் இயக்கிய ‘ஜென்டில்மேன்’திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இவரின் இரண்டாவது திரைப்படமான ‘காதலன்’ மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வந்த ஷங்கர் ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்தார்.
ஹாலிவுட் திரைப்படங்களை போன்று இந்திய படங்களை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் வெளிவந்த ‘எந்திரன்’ திரைப்படம் உலக சினிமாவையே வியக்க வைத்தது. இதைத்தொடர்ந்து ஐ, 2.0, இந்தியன் 2 என இவரது பிரம்மாண்ட படைப்புகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஜென்டில்மேன் படம் தான் சங்கருக்கு முதல் படம் என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் ஜென்டில்மேன் படத்திற்கு முன்பே அவர் எடுக்க வேண்டி திரைப்படம் அழகிய குயிலே. இந்த படத்தின் கதையை குஞ்சுமோனிடம் சங்கர் சொன்னபோது முதலில் ஜென்டில்மேன் படத்தை எடுத்து விடலாம்.
அதன் பிறகு இந்த அழகிய குயிலே படத்தை பார்ப்போம் என சொல்லிவிட்டாராம். ஜென்டில்மேன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்திற்கு பிறகாவது அழகிய குயிலே திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்தாராம் ஷங்கர். மீண்டும் குஞ்சுமோன் காதலன் திரைப்படத்தை முடித்து விடலாம் என்று சொல்லி விட்டாராம் காதலன் திரைப்படத்தையும் ஷங்கர் முடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து ஜீன்ஸ், இந்தியன் , எந்திரன் என அடுத்தடுத்த படங்களை எடுத்த இயக்குனர் ஷங்கர் அவர்களால் தற்பொழுது வரை இந்த படத்தை எடுக்க முடியவே இல்லையாம்.