இந்தியாவில் ஓடிடி-யில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பற்றிய தகவலை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம். இன்றைய சினிமாவில் பல பிரபலங்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்கள். முன்பெல்லாம் நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த போது நடிகைகள் லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தார்கள்.
ஆனால் முன்னணி நடிகைகள் தற்போது கோடிகளில் சம்பளம் பெற்று வருகிறார்கள். சினிமாவை போல ஓடிடியிலும் பல சீரிஸ்கள் ஒளிபரப்பாகி பிரபலமாகி வருகின்றது. மக்கள் திரையரங்குக்கு சென்று படத்தை பார்ப்பதை காட்டிலும் netflix மற்றும் amazon உள்ளிட்ட ஓடிடி தளங்களில் வெளியாகும் சீரிஸ்களை அதிக ஆர்வமுடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று ஓடிடி -யில் அதிகம் சம்பளம் வாங்கும் ஒரு இந்திய நடிகை பற்றி தான் பார்க்க போகிறோம். இவர் முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை விட அதிகம் சம்பளம் வாங்குகிறாராம். அவர் யார் என்றால் பிரியங்கா சோப்ரா தான். இவர் ஓடிடியில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்து வருகிறார்.
பிரைம் வீடியோவில் வெளியாகி மிகவும் புகழ்பெற்ற சீரிஸ் சீட்டாடல். இது 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிகழ்ச்சிக்காக பிரியங்காவுக்கு முன்னணி நடிகருக்கு இணையாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தலா 25 முதல் 30 மில்லியன் டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 200 முதல் 250 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
பிரியங்காவுக்கு முன் அஜய் தேவகன் 125 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி ஓடிடி-யில் அதிகம் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இருந்து வந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரியங்கா சோப்ரா தற்போது முதல் இடத்தை பிடித்திருக்கின்றார். அதேபோல் கரீனா கபூர் ஜானி ஜானி திரைப்படத்திற்கு 12 கோடியும், ஆலியா பட் டார்லிங் திரைப்படத்திற்காக 15 கோடியும் வாங்கியிருந்தார்.
சைஃப் அலிகான் 25 கோடி சம்பளம் வாங்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தி ஃபேமிலி மேன் படத்திற்காக மனோஜ் வாஜ்பாய் 10 கோடி சம்பளம் பெற்றிருந்தார். தொடர்ந்து ஓடிடி-யில் தங்கள் பாத்திரங்களுக்காக நடிகர்கள் 10 முதல் 15 கோடி சம்பளங்கள் பெற்று வரும் நிலையில் பிரியங்கா சோப்ரா இவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.