“கற்றது தமிழ் படத்தால் எனக்கு 2 கோடி ரூபாய் நஷ்டம்… இது யாருக்குமே தெரியாது” – கொந்தளித்த கருணாஸ்!

By vinoth on வைகாசி 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .

அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார். இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும்  திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

   

நடிப்பு மட்டுமில்லாமல் இவர் அரசியலிலும் இறங்கி சட்டசபை உறுப்பினர் ஆனார். முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தான் நடித்த கற்றது தமிழ் திரைப்படத்தால் தனக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசியுள்ளார். கற்றது தமிழ் படத்தில் அவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார்.

   

அந்த படம் உருவாகி ரிலீஸுக்கு சிக்கல் வந்த போது அந்த படத்தை வாங்கி அவர்தான் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தாராம்.  இது வரை யாருக்குமே தெரியாதா தகவல். இதுபற்றி பேசியுள்ள அவர். “கற்றது தமிழ் படத்தை வேறு ஒருவர் தயாரித்திருந்தாலும், அதை வாங்கி நான்தான் ரிலீஸ் செய்தேன். அதனால் எனக்கு 2 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம்.

 

அப்போதைய காலகட்டத்தில் என்னைப் போன்ற ஒரு நடிகருக்கு இது பெரிய தொகை. ஆனால் நான் அப்படி செய்யாவிட்டால் இப்போது தமிழ் சினிமாவுக்கு ராம் என்ற இயக்குனர் கிடைத்திருப்பாரா? இல்லை அஞ்சலி என்ற நடிகைதான் கிடைத்திருப்பாரா?” என ஆவேசமாக பேசியுள்ளார்.