ரீ-ரிலீசில் அதிரவிட்ட தளபதியின் கில்லி.. தலைவர் ரஜினிகாந்தின் ஹிமாலய படத்தை தூசி தட்டி எடுக்கும் படக்குழுவினர்..!!

By admin on வைகாசி 21, 2024

Spread the love

பிரபல நடிகர்களின் பழைய படங்கள் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அந்த வகையில் தளபதி விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. சுமார் 25 நாட்களை கடந்து ஓடிய கில்லி படம் 30 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கடந்த 1999-ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் படையப்பா படம் ரிலீஸ் ஆனது.

ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி'

   

இந்த படத்தில் சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். நீலாம்பரி கதாபாத்திரம் இன்றும் மக்களிடையே பிரபலமாக பேசப்படுகிறது.

   

கில்லி' வெளியாகி 16 ஆண்டுகள்: அனைத்து வயதினருக்கும் பிடித்த படம் | ghilli  release date - hindutamil.in

 

ஏ.ஆர் ரகுமான் இசையில் படையப்பா படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. படையப்பா படத்தை சத்யா நாராயணா, விட்டல் பிரசாத், பி.எல் தேனப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். இந்த நிலையில் தேனப்பன் படையப்பா படத்தை ரீ ரிலீஸ் செய்வது தொடர்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசி இருக்கிறார்.

19 Years of Gilli Movie celebrated by fans memories of actor vijay's gilli  movie | 19 Years of Gilli: 19 ஆண்டுகளை கடந்த கில்லி.. ஒரே படத்திற்கு  பின்னால் நடந்த மாற்றங்கள் என்னென்ன ...

வேட்டையன் படபிடிப்பு தளத்தில் ரஜினிகாந்த் இருந்தார். அங்கு சென்ற தேனப்பன் பல விஷயங்கள் பற்றி பேசி உள்ளனர். அப்போது தேனப்பன் படையப்பா ரீ ரிலீஸ் குறித்தும் பேசி உள்ளார். அதனைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த ரஜினிகாந்த் தாராளமாக செய்யுங்கள் என கூறியுள்ளார்.

மறுவெளியீடாகும் படையப்பா!

சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்தை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. பாசத்திலும், நட்பிலும், மரியாதையிலும், துளியும் அவர் குறையவில்லை, அப்படியேதான் இருக்கிறார் என தேனப்பன் புகழாரம் சூட்டியுள்ளார். விரைவில் படையப்பா படத்தின் ரீ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinkanth's Padayappa Movie Has The Crossed A Milestone Of, 43% OFF