Connect with us

CINEMA

விஜயின் தந்தை SA.சந்திரசேகரை அவமானப்படுத்தினாரா லோகேஷ் கனகராஜ்.. மேடையிலே ஓப்பனாக பேசிய SAC..

நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் கடந்த 1980, 90களில் நிறைய படங்களை இயக்கிய முக்கிய இயக்குநர். சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாவது, சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அந்த இயக்குநரை போனில் அழைத்து பேசினேன். படத்தின் முதல் பாதி மிக அருமையாக இருக்கிறது. படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதை உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். மிகவும் அருமையாக செய்துள்ளீர்கள் என பாராட்டிப் பேசினேன். அவரும் சந்தோஷமாக கேட்டுக்கொண்டிருந்தார்.

   

ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் தொய்வாக உள்ளது. அதில் படத்தில் நீங்கள் காட்டும் மதத்தில் அதுபோன்ற மூடநம்பிக்கை எல்லாம் இல்லை. பெற்ற தந்தையே பிள்ளையை நரபலி கொடுப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அந்த மாதிரி எல்லாம் அந்த மதத்தில் இல்லை என்று கூறினேன். உடனே அவர், சார் நான் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன், அப்புறம் கூப்பிடுகிறேன் என்றார். ஆனால் பிறகு அவர் என்னை கூப்பிடவே இல்லை.

அந்த படத்தை ரிலீஸ் ஆவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே பர்ஸ்ட் காப்பி நான் பார்த்துவிட்டேன். நான் அதை சுட்டிக்காட்டி சொன்ன பிறகாவது அதில் ஏதாவது மாற்றம் செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. பிறகு அந்த படம் வெளியான பிறகு, மக்கள் அந்த இயக்குநரை வெச்சு செய்தார்கள். இதே போன்று துப்பாக்கி படம் எடுத்த போது, அந்த படத்தின் இயக்குநர் ஸ்லீப்பர் செல் பற்றி சொன்னார். அப்போது அவரிடம், ஸ்லீப்பர் செல் என்பது எனக்கு புரியும். படம் பார்க்கிற ஆடியன்ஸ்க்கு புரியுமா எனக் கேட்டேன்.

அவர் எனக்கு பதில் சொல்லவில்லை. ஆனால் துப்பாக்கி படத்தில், ஸ்லீப்பர் செல் குறித்து முன்னாள் சிபிஐ தலைவர் கார்த்திகேயன் ஸ்லீப்பர் குறித்து சொல்வது போல காட்சியமைத்து, அதில் எனக்கு பதில் சொல்லி இருந்தார். இதுதான் பக்குவம். அனுபவமுள்ள டைரக்டர் என்று பாராட்டினேன், என்றேன். எஸ்ஏ சந்திரசேகரை அவமதித்தது, லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். லியோ படம் குறித்து அவர் சொன்ன போதுதான், இப்படி அவர் எஸ்ஏசியை அவமதித்த சம்பவம் நடந்துள்ளது. இது விஜய் ரசிகர்களை பயங்கரமாக அப்செட் செய்துள்ளது.

#image_title

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top