#image_title
சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு கொஞ்சம் லேட்டா தான் வருவாரு ஆனால் 7 மணி நேரம் எடுக்க வேண்டிய காட்சியை 5 மணி நேரத்தில் முடித்து கொடுத்துவிடுவார் என இயக்குனர் பாண்டியராஜன் சிம்பு குறித்து பேசி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்திருக்கின்றார். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், இசையமைப்பை, பாடல்கள், நடனம் என பன்முகத்தன்மை கொண்டவராக வளம் வரும் சிம்பு பல குற்றச்சாட்டுகளையும் சந்தித்து இருக்கின்றார்.
ஷூட்டிங்கு சரியாக வரமாட்டார், தாமதமாக வருவார் என பல சர்ச்சைகள் அவர் மீது எழுந்தது. ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரித்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த சிம்பு பின்னர் தனது உடல் எடையை கடகடவென குறைத்து ஈஸ்வரன் என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். அதனை தொடர்ந்து மாநாடு திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தற்போது கமலஹாசன் உடன் இணைந்து தக் லைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு தன்னுடைய 48வது படத்திலும் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கின்றது. இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருந்தார்.
அதில் அவர் நான் சோம்பேறிகளுடன் எப்போதும் சேரமாட்டேன், அவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்ள மாட்டேன், என்னுடன் பணியாற்றிய ஹீரோகளுக்கு என்னைப் பற்றி நன்றாக தெரியும். இன்று வரை அவர்களுடன் தொடர்பில் இருக்கின்றேன். எனக்கும் சிம்புவுக்கும் பிரச்சனை என்று கூறி வருகிறார்கள். எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்கள் அப்பா அம்மாவால் தான் எனக்கு பிரச்சனை.
இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்பு லேட்டாக தான் வருவார். இருப்பினும் ஏழு மணி நேரம் படமாக்க வேண்டிய காட்சிகளை 5 மணி நேரத்தில் முடித்துக் கொடுத்து விடுவார். இதனால் எனக்கு வேலையும் முடிந்துவிடும். அவர் மீது எனக்கு எந்த மனஸ்தாபமும் கிடையாது. சிம்பு ஒரு சிறந்த நடிகர், அவரைப்போல ஒரு நன்றாக பழகக் கூடிய மனிதரை பார்க்க முடியாது.
ஆனால் இப்படி இருக்கிறார் என்பது தான் எனக்கு வருத்தம். விடிவி கணேசிடம் எப்போதும் என்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டே இருப்பார். என்னிடம் கோவப்பட்டதே கிடையாது இப்போதும் நாங்கள் நட்போடு தான் இருந்து வருகிறோம். மேலும் சிவகார்த்திகேயனுடன் எனக்கு பிரச்சனை என்று கூறுகிறார்கள். அப்படியெல்லாம் எதுவுமே கிடையாது, சூரியும் மிகச்சிறந்த மனிதர். அவரும் மிகச் சிறப்பாக நடிக்க கூடிய ஒரு நபர் என்று பலரைப் பற்றி பேசியிருந்தார் பாண்டியராஜ்.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…