#image_title
தமிழ் சினிமாவில் நகைச்சுவை அம்சத்தோடு வரும் படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கும். பாமா விஜயம், காதலிக்க நேரமில்லை முதல் ஆண்பாவம், உள்ளத்தை அள்ளித்தா என இந்த பட்டியல் நீளும். இப்படி 1985 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஆண்பாவம் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு படமாக அமைந்துள்ளது.
கன்னிராசி மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் பாண்டிராஜனின் இரண்டாவது படம் ஆண்பாவம். பாண்டியனோடு அவரும் ஒரு கதாநாயகனாக அந்த படத்தில் நடித்திருந்தார். அண்ணன் தம்பியான பெரிய பாண்டி, சின்ன பாண்டி ஆகியவர்களின் குறும்புத்தனமான வாழ்க்கையில் திருமணம் குறுக்கிடும்போது ஏற்படும் குழப்பங்களும், அதன் பின்னான முடிவுகளுமே இந்த படத்தின் கதை.
இந்த படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை வயிறுவலிக்க சிரிக்க வைக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருந்தார் பாண்டியராஜன். இந்த படத்தில் ரேவதி கதாபாத்திரம் கிணற்றில் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்.
அவரை பரிசோதித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ரேவதி கிணற்றில் விழுந்த அதிர்ச்சியில் பேசும் திறனை இழந்துவிட்டதாக சொல்வார். இந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் பாண்டியராஜனின் நண்பர். அவரால் வாய் பேச முடியாது என்பது பலருக்கும் தெரியாது. அவரிடம் வசனங்களைக் கொடுத்து படிக்க சொல்லி, அதற்கேற்றார் போல வாயசைக்க சொல்லி விட்டாராம்.
பின்னர் டப்பிங்கில் அவரின் வாயசைவுக்கு ஏற்ப வசனங்களைப் பேசிக்கொண்டார்களாம். இந்த காட்சியை தியேட்டரில் பார்த்துவிட்டு அந்த நண்பரும் அவரின் குடும்பத்தினரும் மிகவும் நெகிழ்ந்து போய் பாண்டியராஜனிடம் வந்து நன்றி தெரிவித்துக் கொண்டார்களாம்.
இந்த சுவாரஸ்யமான தகவலை பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் பாண்டியராஜன் அந்த படத்துக்காக நடந்த ஒரு பாராட்டு விழாவில் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தை சொல்லி ‘இதில் நான் ஒன்றுமே செய்யவில்லை. சினிமாதான் அந்த மேஜிக்கை செய்தது” எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…