தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் அரசு சாரா தனி நபர்கள் பங்கேற்றது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று சுட்டிக்காட்டியுள்ள திமுகவினர், தமிழக அரசியல் சூழலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) வெளிப்படையாகவே குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆளுநரிடம் தங்களது கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மனுவில் திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் திட்டமிட்டு மிரட்டியதாகக் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாக நடைபெறும் இத்தகைய குதிரை பேர நடவடிக்கைகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மிரட்டப்படும் விவகாரத்தில், தமிழக பொறுப்பு ஆளுநர் உடனடியாக தலையிட்டு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…