#image_title
மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான நித்திலன் சாமிநாதன் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி கிட்டதட்ட 50 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார், இடையில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மீண்டும் நடித்த ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறிவிட்டு கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் மகாராஜா.
இந்த திரைப்படம் இவரின் 50வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் பக்ரீத் பண்டிகையை குறிவைத்து திரையரங்குகளில் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக சாந்தமாக நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.
ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன் தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகிய ஏழு நாட்கள் ஆகின்ற நிலையில் உலகம் முழுவதும் 58 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றது. விரைவில் 100 கோடியை தொடும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய இவர் பல வருடங்கள் காத்திருப்பு பிறகு கிடைத்த திரைப்படம் தான் மகாராஜா.
இந்த திரைப்படத்தின் மூலமாக தன்னை நிரூபித்து இருக்கும் நித்திலன் சாமிநாதன் இப்படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கின்றார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்த திரைப்படத்திற்கு நான்கு கோடி ரூபாய் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலமாக பெரியளவு வரவேற்பை பெறாத போது தற்போது இயக்கிய மகாராஜா திரைப்படம் இவரை திரையுலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ராமபையனூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் தயார்…
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அம்மாநில அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் வெளியுறவு…
தமிழகத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கி வரும்…
தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், மக்கள் நலன் சார்ந்த இந்த அரசில் அவர்களின் உரிமைகள்…
திமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று…