கோடிகளில் புரளும் ‘மகாராஜா’.. படத்தின் வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் நித்திலன்.. எவ்வளவு தெரியுமா..?

By Mahalakshmi on ஜூன் 22, 2024

Spread the love

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான நித்திலன் சாமிநாதன் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகி கிட்டதட்ட 50 திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார், இடையில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் மீண்டும் நடித்த ஹீரோவாக தான் நடிப்பேன் என்று கூறிவிட்டு கம்பேக் கொடுத்த திரைப்படம் தான் மகாராஜா.

   

   

இந்த திரைப்படம் இவரின் 50வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் பக்ரீத் பண்டிகையை குறிவைத்து திரையரங்குகளில் வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக சாந்தமாக நடித்து தமிழ் ரசிகர்களை மீண்டும் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார்.

 

ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன் தாஸ், திவ்யபாரதி, பாரதிராஜா, சிங்கம் புலி, நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் வெளியாகிய ஏழு நாட்கள் ஆகின்ற நிலையில் உலகம் முழுவதும் 58 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கின்றது.  விரைவில் 100 கோடியை தொடும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தை இயக்கிய இவர் பல வருடங்கள் காத்திருப்பு பிறகு கிடைத்த திரைப்படம் தான் மகாராஜா.

இந்த திரைப்படத்தின் மூலமாக தன்னை நிரூபித்து இருக்கும் நித்திலன் சாமிநாதன் இப்படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கின்றார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்த திரைப்படத்திற்கு நான்கு கோடி ரூபாய் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலமாக பெரியளவு வரவேற்பை பெறாத போது தற்போது இயக்கிய மகாராஜா திரைப்படம் இவரை திரையுலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது என்று தான் கூற வேண்டும்.