#image_title
தமிழ்நாட்டின் சுயநலமற்ற தலைவராகவும் தமிழ் சினிமாவின் மகா நடிகனாகவும் திகழ்ந்தவர் MGR. இவரது முழு பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். இவரது இளமைப் பருவத்தில் குடும்ப வறுமையின் காரணமாக MGR அவரது சகோதரர் எம் ஜி சக்கரபாணியும் நாடக குழுவில் சேர்ந்தனர். அவர் பின்னாலில் தமிழகமே போற்றும் தலைவனாக மாறுவார் என்று நினைத்திருக்க மாட்டார்.
1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் துணை வேதத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான MGR பின்னர் 1940 50 60களில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராகவும் புகழ்பெற்ற நடிகராகவும் வலம் வந்தவர் MGR .
MGR, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய மூவரையும் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் மூவேந்தர்கள் என்று அழைத்தனர். ஜெமினி கணேசனின் படங்கள் காதல் திரைப்படங்களாக இருக்கும். சிவாஜிகணேசன் படங்கள் சமுதாயம் குடும்பம் சார்ந்ததாக இருக்கும். MGRரின் படங்கள் அதிரடி காட்சிகள் நிறைந்ததாகவும் திராவிட சிந்தனைகள் கொண்டதாகவும் இருக்கும்.
MGR நடித்துக் கொண்டிருக்கும் போதே அரசியல் ஆர்வம் கொண்டு திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். ஒரு கட்டத்திற்கு பிறகு தானே ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் கண்டார் MGR. அவருக்கு இருந்தவர்கள் ரசிகர்கள் அல்ல பக்தர்கள். அந்த அளவுக்கு மக்களின் அன்பை வென்றிருந்தார் MGR. அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
அது என்னவென்றால் MGR நடித்து வெளியான மதுரவீரன் என்ற ஒரு திரைப்படம். இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் ஆனது. ஆனால் இதில் ஒரு பிரச்சனையும் ஆனது. ஏனென்றால் இந்த திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் MGRரை சாகடித்து இருப்பார் டைரக்டர். இதை பார்த்ததும் கொந்தளித்த MGR ரசிகர்கள் தியேட்டரை எரித்து இருக்கின்றனர். என்ன செய்வது படத்தை தூக்கி விட்டால் லாபம் கிடைக்காது என்று திணறிய பட குழுவினர் ஒரு புது யுக்தியை கையாண்டனர்.
அது என்னவென்றால் படத்தில் நடித்த என் எஸ் கே அவர்களை வைத்து படத்தின் கிளைமாக்ஸ் முடிந்தவுடன் மதுரவீரன் சாகவில்லை அவர் மக்களுக்காக பணியாற்ற மீண்டும் வருவார் மக்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வந்து கட்டாயம் உதவி செய்வார் என்ற வார்த்தையை இணைத்தனர். இதனால் மக்கள் ஓரளவு சாந்தி அடைந்து படத்தை கண்டனர். அவ்வாறு மக்கள் MGRரின் மீது அளவு கடந்த பாசத்தையும் மரியாதையையும் பக்தியையும் கொண்டிருந்தனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…