#image_title
Swiggy ஒரு இந்திய ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த Swiggy பெங்களூரை தலைமை இடமாக கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் ஸ்விக்கி செயல்பட்டு வருகிறது. உணவு விநியோகத்தை தவிர Swiggy Instamart என்ற பெயரில் வணிக சேவையையும் Swiggy Genie என்ற பெயரில் பார்சல் டெலிவரிகளையும் செய்து வருகிறது.
தற்போது Swiggy தனது வணிகத்தை மேம்படுத்தவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதுதான் ‘Project Next’. இந்த ப்ராஜெக்ட் மூலம் டெலிவரி பார்ட்னர்களுக்கு திறன் பயிற்சி, இன்டர்ன்ஷிப் ஆகியவற்றை வழங்கி சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவாக பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக Swiggy மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த Project Next மூலம் டெலிவரி பார்ட்னர்கள் Swiggyயில் விற்பனை நிர்வாகிகளாக புதிய பங்கை மேற்கொள்வார்கள். இந்த Swiggy விற்பனை நிர்வாகிகள் பெரு நகரங்களில் உணவகங்களுக்கு உயர்தர ஆதரவை வழங்குவார்கள்.
இந்த Project Next 150 க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் சந்தைகளில் உணவு விரிவாக்கத்தை மேம்படுத்த தொழில் முன்னேற்றத்தை வழங்க நோக்கமாகக் கொண்டிருக்கிறது. Swiggy My Food Market Plus இன் CEO ரோஹித் கபூர் இந்த ப்ராஜெக்ட் பற்றி கூறுகையில், Swiggy நாடு முழுவதும் 4 லட்சம் டெலிவரி பார்ட்னர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் குழுவை மேம்படுத்தவே ப்ராஜெக்ட் நெக்ஸ்ட் தொடங்கியுள்ளோம். இந்த தனித்துவமான ப்ராஜெக்ட் ஆனது டெலிவரி பார்ட்னர்களை ப்ளூ காலரில் இருந்து வைட் காலர் தொழிலாளர்களாக மாற்ற உதவும்.
மேலும் இந்த ப்ராஜெக்ட் நெக்ஸ்ட் இன் கீழ் நூற்றுக்கணக்கான சேல்ஸ் எக்சிகியூட்டிஸ் ஏற்கனவே 360 க்கும் மேற்பட்ட உணவகங்களில் நுழைந்துள்ளனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டத்தில் முதல் கட்டமாக வடோதரா, அமிர்தசரஸ், நாசிக், ஆக்ரா மற்றும் தார்வாட் போன்ற நகரங்களில் நூற்றுக்கணக்கான டெலிவரி பார்ட்னர்களை சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். இந்த Swiggyயின் புதிய ப்ராஜெக்ட் ஆன ப்ராஜெக்ட் நெக்ஸ்ட் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல சான்ஸ் என்றே சொல்லலாம். இதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…