Categories: சினிமா

என்னை மிகவும் பாதித்த ரசிகை… ரொம்ப எமோஷனல் ஆயிட்டேன்… மனம்திறந்த நடிகர் மோகன்…

Spread the love

மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய மிகப் பிரபலமான நடிகர்களுள் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் மலையாள படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் மோகன். முதலில் கன்னடம் மற்றும் மலையாள படத்தில் அறிமுகமான மோகன் 1980 ஆம் ஆண்டு மூடுபனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்ததாக நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, அந்த சில நாட்கள், இளமை காலங்கள், மனைவி சொல்லே மந்திரம், வேங்கையின் மைந்தன், நான் பாடும் பாடல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் மோகன்.

இவர் பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போல் ஒரு பாட்டு இருக்கும். அதனால் இவரை மைக் மோகன் என்றும் கூறுவர். பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் மோகன் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும். அதனால் இவரது படங்களில் மேடையில் இவர் எஸ்பிபி பாடிய பாடலுக்கு நடித்த போது மக்கள் இவர்தான் அந்த பாடலை பாடி இருப்பார் என்று நம்பும் அளவுக்கு தத்ரூபமாக நடித்திருப்பார் மோகன்.

பிறகு தெய்வ பிறவி, பிள்ளை நிலா, மௌன ராகம், மெல்ல திறந்தது கதவு, ரெட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன், இது ஒரு தொடர்கதை போன்ற மெகா ஹிட் படங்களில் நடித்து 1980களில் புகழின் உச்சியில் இருந்தார் மோகன்.

2000 களில் சினிமாவிலிருந்து விலகிய மோகன் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் ஹரா என்ற திரைப்படத்தில் கம்பேக் கொடுத்து நடித்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணியில் கலந்து கொண்ட மோகன் தன் மனதை பாதித்த ஒரு ரசிகையை பற்றி கூறியிருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால் சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து ஒரு அம்மா என்ன பாக்க வந்தாங்க. புர்கா போட்டுட்டு அவங்க பையனோட வந்திருந்தாங்க. என்கிட்டே நல்லா பேசுனாங்க உங்கள பிடிக்கும்னு சொன்னாங்க. அவங்க பையன் அம்மா நீ சொல்லுமா அப்படின்னு சொன்னாங்க. உடனே அந்த தாய் அவங்க போட்டிருந்த தாலி செயினில் இருந்து ஒரு லாக்கெட் எடுத்து திறந்து காட்டினார்கள். அதில் பார்த்தால் என்னோட போட்டோ. எனக்கு உடம்பு சிலித்துருச்சு.

உடனே அந்த அம்மாவிடம் என்னம்மா நீங்க எதுக்கு இப்படி பண்ணீங்க அப்படின்னு நான் கேட்டேன். இல்லையா நான் கல்யாணம் ஆன புதுசு உங்க படங்கள் எல்லாம் வரும்போது எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு என் கணவர்கிட்ட சொன்னேன். உடனே என் வீட்டுக்காரரு இதை நீ போட்டுக்கோன்னு எனக்கு நினைவா கொடுத்தாரு. அதனால ஒன்னும் தப்பில்லையா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சாகுற வரைக்கும் என்னோட இருக்கட்டுமே யாரும் கேட்க மாட்டாங்கல்ல அப்படின்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப மனச பாதிச்சிருச்சு. இந்த அளவுக்கு நான் படங்களில் நடிக்காவிட்டாலும் என்னுடைய ஃபேன்ஸ்னு சொல்ற ரசிகர் ரசிகைகள் என் மீது உள்ள கொண்டுள்ள அன்பும் பிரார்த்தனைனால தான் இன்னைக்கு நான் நல்லா இருக்கேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மோகன்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago