#image_title
தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன.
அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.
பாலா தன்னுடைய சுயசரிதைப் புத்தகமான ‘இவன்தான் பாலா’வில் தன்னுடைய வாழ்க்கையை எந்த ஒளிவு மறைவுமின்றி பகிர்ந்துள்ளார். ஒரு போக்கிரியாக இருந்த தன்னை சினிமாதான் மனிதனாக்கியது என்று கூறியுள்ளார். அப்படி அவரை பண்படுத்தியதில் அவரின் குருநாதரான பாலு மகேந்திராவுக்கு முக்கியமானப் பங்குண்டு.
பாலா இயக்கியதிலேயே கமர்ஷியலாக எடுக்கப்பட்ட படம் என்றால் அது அவன் இவன் திரைப்படம்தான். அந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் வசூல் ரீதியாகக் கலக்கியது. பாலாவின் சினிமா வாழ்க்கையில் மிக அதிக வசூல் செய்த படம் என்றால் அது அவன் இவன் திரைப்படம்தான்.
இந்நிலையில் அவன் இவன் திரைப்படம் பற்றி சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியுள்ள பாலா “அவன் இவன் படத்தின் கதை இப்போது நீங்கள் பார்த்தது போல முதலில் நான் எழுதவில்லை. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் ஹைனஸ் வேடத்தில் நடித்த ஜி எம் குமாரின் வெகுளியான நடிப்பைப் பார்த்தபின்னர்தான், இந்த கதையில் இவர் இறந்தால்தான் அது அழுத்தமாக இருக்கும் என நினைத்து மாற்றினேன்.” எனக் கூறியுள்ளார்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…